ஆட்டொமொபைல் சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது தனது டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 5.89 லட்சத்தில் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ. 7.31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
- Lxi, Vxi, Zxi, மற்றும் Zxi+ என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இதன் டாப் எண்ட் Zxi+ மேனுவல் மற்றும் ஆட்டமேடிக் வேரியண்ட் விலை முறையே ரூ. 8.28 லட்சம் மற்றும் ரூ. 8.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 2020 டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் புதிய எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள்,
- புதிய முன்புற கிரில்,
- மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
- இத்துடன் 15 இன்ச் பிரெசிஷன் கட் அலாய் வீல்கள்
- வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி டிசையர் மாடலில் அடுத்த
- தலைமுறை K சீரிஸ் டூயல் ஜெட்,
- டூயல் VVTBS6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
- இதன் 1.2 லிட்டர்,
- நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 81 பி.ஹெச்.பி. மற்றும் 133
- என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
- இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக