கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதற்கு இடையில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ,அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் கொரோனா சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக