Huawei நிறுவனம் அதன் ஹூவாய் P40 தொடர் ஸ்மார்ட்போன்களை வருகிற மார்ச் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதை உறுதி செய்துள்ளது. இதோ அதன் அம்சங்கள்!
சில நாட்களுக்கு முன்பு, ஹூவாய் நிறுவனத்தின் உலகளாவிய பத்திரிகையாளர் சந்திப்பில், ஹூவாய் நுகர்வோர் வணிக தலைமை நிர்வாக அதிகாரியான யூ செங்டாங், வருகிற மார்ச் 26 அன்று ஹூவாய் P40 தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் போது அவர் பி40 தொடர் ஸ்மார்ட்போன்களை ‘உலகின் மிக சக்திவாய்ந்த 5ஜி பிளாக்ஷிப் என்றும் குறிப்பிட்டார், அந்த இடத்தில் தான் அத்துணை பேரின் ஆர்வமும் ஆகாயத்தை நோக்கி எகிற தொடங்கியது.
ஹூவாய் பி தொடர் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் அதன் வலுவான கேமரா அம்சங்களுக்காக அறியப்படுகிறது, மேலும் இந்த ஆண்டின் பி 40 தொடரும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆக ஹூவாய் பி 40 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு பின்னர் ஸ்மார்ட்போன் கேமராக்களை சோதனை செய்து, எது அதிக மதிப்பெண்கள் பெற்றது என்கிற அறிக்கையை வெளியிடும் டிஎக்ஸ்ஓமார்க்கின் தரவரிசையானது மாற்றி எழுதப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இது தவிர, சமீபத்தில் வெளியான சில ஆதாரங்களின்படி, ஹூவாய் பி 40 தொடரின் சில பிரதான அம்சங்கள் அம்பலப்படுத்தின. அதன்படி, ஹூவாய் பி40 தொடரில் கிரின் 990 5ஜி ப்ராசஸர் இடம்பெறும், இது நிலையான 5ஜி இணைப்பை வழங்கும்.
மேலும் இந்த புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் ஆனது கூகுள் மொபைல் சேவைகளுக்கான மாற்றான Huawei mobile services உடன் வெளியாகும்.
எல்லோரின் கவனமும் குவியும் இதன் இமேஜிங் துறையை பொறுத்தவரை, ஹூவாய் பி40 தொடரின் பிரதான கேமரா ஆனது 52 மெகாபிக்சல் சிஎம்ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் மற்றும் 1 / 1.3 இன்ச் அவுட்சோல் கொண்டிருக்கும் என்று சில லீக்ஸ் தகவல்கள் தெரிவித்தன. கூடுதலாக, இது 40 மெகாபிக்சல் ஃபிலிம் லென்ஸ், பத்து மடங்கு ஒளி மாற்றத்தை ஆதரிக்கும் பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் டோஃப் லென்ஸ் ஆகியவைகளையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஹவாய் பி 40 தொடரின் பிரதான சிஎம்ஓஎஸ் ஆனது 16 இன் 1 பிக்சல்கள் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் என்றும் வதந்திகள் வந்துள்ளன. இது தற்போது தொழில்துறையில் மிகவும் முன்னேறிய ஒரு தொழில்நுட்பம் ஆகும்.
ஹூவாய் பி 40 ப்ரோ ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதத்தை கொண்ட டிஸ்பிளே பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வரவிற்கும் ஹூவாய் பி தொடர் ஆனது கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் கருதலாம். ஆனால் இந்த நேரத்தில், மேற்கூறிய பல அம்சங்கள் வதந்திகளின் மட்டத்தில் உள்ளன என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக