நேற்றுதான் 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்தது
போல் உள்ளது, அதற்குள் மார்ச் வந்துவிட்டது. இதற்கிடையில் எக்கச்சக்கமான புதிய ஸ்மார்ட்போன்கள்
வெளியாகி விட்டன. அப்படியாக வெளியான எந்தவொரு ஸ்மார்ட்போனாலுமே உங்களை கவரவில்லை என்றால்,
எதுவுமே உங்களுக்கு பிடிக்கவும் இல்லை என்றால், கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு
தன வந்துள்ளீர்கள்.
ஏனெனில் இக்கட்டுரையின் வழியாக மார்ச் 2020 இல் அறிமுகமாகவுள்ள
புதிய ஸ்மார்ட்போன்களை, அவற்றின் எதிர்பார்க்கபப்டும் அம்சங்களையும் தான் பார்க்கவுள்ளளோம்.
இந்த 2020 மார்ச் மாதத்தில் ஒப்போ, நோக்கியா, இன்பினிக்ஸ், ஒன்பிளஸ், சாம்சங், ஹூவாய்
போன்ற பிராண்டுகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவரத்
தயாராக உள்ளன. வாருங்கள் அவைகள் என்னென்ன போன்கள் என்று பார்ப்போம்!
ஒப்போ ரெனோ 3 மற்றும் ஒப்போ ரெனோ 3 ப்ரோ
ஒப்போ தனது ரெனோ 3 ப்ரோவை சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. இது 2020 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது கேமராக்களைப் பொருத்தவரை, இது செல்பீக்களுக்காக முன்பக்கத்தில் 44 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஒப்போ ரெனோ 3 ப்ரோவில் 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5 அங்குல AMOLED முழு HD+ டிஸ்பிளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட், கலர் ஓஎஸ் 7.0, ஆண்ட்ராய்டு 10 போன்ற அம்சங்கள் இடம்பெறும். உடன் வைஃபை 802.11 அ / பி / ஜி / என், ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போன்ற இணைப்பு விருப்பங்கள் இருக்கும்.
இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கும். இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோவின் விலை ரூ 40.790 என்கிற புள்ளியை எட்டலாம்.
நோக்கியா 10 (5ஜி)
நோக்கியா அதன் நோக்கியா 10 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட இது மார்ச் 2020 இல் கண்டிப்பாக வெளியாகும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. 5ஜி துறைக்குள் நுழையும் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸர், 16MP + 8MP டூயல் ரியர் கேமராக்கள், 13MP செல்பீ கேமரா, ஆட்டோஃபோகஸ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ், டூயல் கலர் எல்இடி ஃப்ளாஷ், டிஜிட்டல் ஸூம், ஆட்டோஃப்ளாஷ், பேஸ் டிடெக்ஷன் மற்றும் டச் டூ போகஸ் போன்ற கேமரா அம்சங்கள், 4000 எம்ஏஎச் பேட்டரி, 128 ஜிபி இண்டர்னல் மெமரி, 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 6.0 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே போன்ற பிரதான அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ
இன்ஃபினிக்ஸ் தனது எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை பாப்-அப் செல்பி கேமராவுடன் வருகிற மார்ச் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, இதன் லீக்ஸ் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பீ கேமரா, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு ஆகியவைகளை கொண்டிருக்கும்.எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது 4000 எம்ஏஎச் பேட்டரி திறன், மீடியாடெக் ஹீலியோ பி 22 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 720 x 1600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, பேஸ் டிடெக்ஷன், டிஜிட்டல் ஸூம், டச் டூ ஃபோகஸ் மற்றும் ஆட்டோ ஃபிளாஷ் போன்ற கேமரா அம்சங்கள் போன்றவைகளை கொண்டிருக்கலாம். இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோவின் விலை நிர்ணயம் ரூ.9,999 ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ
ஒன்பிளஸ் 8 ப்ரோ தான் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 2020 ஆம் ஆண்டில் 6.65 இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது மட்டும் உறுதி, ஆனால் துல்லியமான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை.லீக் ஆன அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 மற்றும் க்வால்காமின் எக்ஸ்55 5ஜி மோடமைப் பயன்படுத்தும், உடன் 48MP + 16MP + 12MP ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கலாம்.
ஒன்பிளஸ் 8 வரிசையில் ஒன்பிளஸ் 8 லைட், ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2
ஒப்போ
ஃபைண்ட் எக்ஸ் 2 ஆனது மார்ச் 6, 2020 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த
ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர், 6.5 இன்ச் அமோலேட் டிஸ்பிளே,
பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 32 மெகாபிக்சல்கள் செல்பீ கேமரா
ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர இது 4065 mAh பேட்டரி திறன், ஆடியோ ஜாக், 8
ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் மெமரி போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.
முன்னதாக வெளியாக லீக்ஸ் தகவலின்படி,இந்த வரவிருக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது
சோனி சென்சாரை Omnidirectional Focusing டெக்னாலஜியுடன் பயன்படுத்தும் என்று
கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக