>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 1 ஏப்ரல், 2020

    அருள்மிகு காளியம்மன் கோயில்

    மூலவர் : காளியம்மன்
    உற்சவர் : காளியம்மன்
    அம்மன்/தாயார் :  காளியம்மன்
    தல விருட்சம் :  வேப்பமரம்
    தீர்த்தம் : கோபால சமுத்திரம்
    ஆகமம்/பூஜை : சைவ ஆகமம்
    பழமை : 500 வருடங்களுக்குள் 
    புராண பெயர் : - 
    ஊர் : திண்டுக்கல்
    மாவட்டம் : திண்டுக்கல்
    மாநிலம் :  தமிழ்நாடு

     பாடியவர்கள்:
       
      - 
       
      திருவிழா:
       
       ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்தரி 
       
      தல சிறப்பு:
       
      திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் போது இக்கோயிலில் இருந்து தான் முதல் மாவிளக்கு எடுத்து செல்லப்படுகிறது. 
       
     திறக்கும் நேரம்:
       
      காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
       
     முகவரி:
       
      அருள்மிகு காளியம்மன் கோயில், கோபால சமுத்திர வடகரை, திண்டுக்கல். 624001 
       
     போன்:
       
      +91 98426-06319 
       
      பொது தகவல்:
       
       இக்கோயில் வடக்குபுறம் பார்த்து அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே அம்மன் வடபுறமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். அம்மனின் கோயில் வாசலில் கருப்பணசுவாமி, மதுரைவீரன் சுவாமிகள் நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றனர். கோயில் உட்பிரகாரத்தில் கால பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, முருகன், கன்னிமூலகணபதி, பேச்சியம்மன், கைலாசநாதர் வரதராஜபெருமாள், ஆஞ்சநேயர் சுவாமிகள் உள்ளனர். கோயிலின் நுழைவு பகுதியில் திரிசூலமும், வாயிலில் விநாயகர், முருகன் காட்சி தருகின்றனர். ராஜகோபுரம் 32 அடி உயரமாகும். காளியம்மன், சரஸ்வதி, லட்சுமி  கடவுள்களின் சிலைகள் உள்ளன 
       

     பிரார்த்தனை
       
      திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் வேண்டுதல்,  தொழில். 
       
     நேர்த்திக்கடன்:
       
      தீச்சட்டி எடுத்தல், சேவல் பலிதரல் பொங்கல்வைத்தல் ஆடி வெள்ளியில் கஞ்சி காய்ச்சி ஊற்றுதல். 
       
      தலபெருமை:
       
      திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழாவின் போது ஊர் பொதுமக்கள் சார்பில் முதல் மாவிளக்கு எடுத்தல் இக்கோயிலில் இருந்துதான் துவங்குகிறது. ஆடிவெள்ளிதோறும் பக்தர்களுக்கு கஞ்சி வழங்குதல் கடந்த 20 ஆண்டுகளாக வழங்குதல், வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் (உற்சவர்) இப்பகுதியில் உள்ள தெருக்கள் தோறும் வீதிஉலா வருவது தனிச்சிறப்பு. பக்தர்களின் திருமணம், வீடு, சொத்து வாங்குதல் போன்றவற்றிற்கும், தொழில் குறித்தும் பூக்கட்டி போடுதல் (சிவப்பு/வெள்ளை) வழக்கத்தில் உள்ளது. சிவப்பு நிறம் வந்தால் அம்மன் அனுமதி தந்ததாக பக்தர்கள் கருதுகின்றனர். 
       
        தல வரலாறு:
       
      சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த பிச்சை முத்து என்பவரது மூலம் நேரிடையாக அம்மன் சுயம்புவாக இப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். இப்பகுதி முழுவதும் புதர் செடி கொடியாக இருந்தது. அம்மன் சுயம்புவாக எழுந்தருளினாள். அதன்பின் இப்பகுதி வளர்ச்சி பெற்று பரம்பரையாக பூசாரிகள் அம்மனை பூஜித்து வருகின்றனர். அதன்பின் திருப்புபவன் ஆற்றில் இருந்து பேச்சியம்மன் சிலை எடுத்து வந்து இங்கு வழிபட துவங்கினர். கன்னிமூல கணபதியும், அதன்பின் பக்தர்கள் மூலமாக முருகன், காலபைரவர், நவகிரகங்கள், துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர் மதுரைவீரன் கருப்பணசாமி சிலைகள் சேர்த்து வழிபட துவங்கினர். 13.7. 2005ல் கும்பாபிஷேகம் நடந்தது.

       
     சிறப்பம்சம்:
       
      அதிசயத்தின் அடிப்படையில்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் போது இக்கோயிலில் இருந்து தான் முதல் மாவிளக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக