Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 மார்ச், 2020

சிக்கலில் 50 மில்லியன் வேலைகள்.. கொரோனா அச்சத்தில் முடங்கி போன ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து துறை!



னுதினமும் காலையில் எழுந்தவுடன் இன்று எத்தனை பேரை பலி கொண்டுள்ளதோ இந்த கொடிய வைரஸ். என்று அஞ்சப்படும் வகையில் தான், கொரோனாவின் தாக்கம் அனுதினமும் அதிகரித்து வருகிறது.
மக்கள் பயத்தினால் தாங்கள் எங்கும் செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் சீனாவின் வுகான் மாகாணத்தில் என்னவெல்லாம் நடந்ததோ, அதை தற்போது இந்தியாவில் காண ஆரம்பித்துள்ளோம்.
இன்னும் சொல்லப்போனால் மக்கள் கூட்டமும் ஆங்காங்கே குறைய ஆரம்பித்துள்ளது. வீதிகள் பல இடங்களில் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதெல்லாம் முடக்கம்
கடைகள், சுற்றுலா தலங்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், உணவு விடுதிகள், ஹோட்டல்கள் என அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் பல நகரங்கள் வெறிச்சோடி போய் காண ஆரம்பித்துள்ளது. அதிலும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மால்கள், தியேட்டர்கள் என பல இடங்கள் மூடப்பட்டுள்ளது.
பெருத்த அடி தான்
இந்த நிலையில் கொரோனா வைரஸின் தொற்று காரணமாக இந்திய அரசு அனைத்து விசாக்களையும் ரத்து செய்துள்ளது. இதனால் வெளிநாட்டு பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து விட்டது என்று கூறலாம். இதனால் ஹோட்டல் மற்றும் டிராவல் ஏஜெண்டுகள், டீர் ஆப்ரேஷன்ஸ், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், விமான நிறுவனங்கள் என அனைத்தும் பெரிய அளவில் அடியை எதிர்கொள்ளக் கூடும் என்றும் கூறப்படுகிறது
பணியினை இழக்கும் அபாயம்
இது தான் இப்படி எனில், இத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் தங்களது வேலையினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி 195 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 4 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பாதிப்பு
இந்த நிலையில் உலகம் முழுக்க கொரோனாவின் அதிரடி தாக்கத்திற்கு 2,45,913 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதே 10,048 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சர்வதேச நாடுகளும் மற்ற நாட்டு விசாக்களை ரத்து செய்துள்ளனர். இதனால் விமான போக்குவரத்தும் தடை பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பெரும்பாலும் சர்வதேச அளவிலும் முடங்கி போயுள்ளன.
அடிப்படை வாழ்வாதாரம்
இதனால் உலகம் முழுக்க லட்சக் கணக்கானோர் தங்களது வேலையினை இழக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியாவிலும் இதே நிலை தான். இதனால் பெரும்பாலோனர் தங்களது வாழ்வாதாரத்தையும் இழக்க தொடங்கியுள்ளனர். இதனால் பலர் தங்களது வருவாயினை இழக்க நேரிட்டுள்ளதோடு, அரசும், சரி தனியார் நிறுவனங்களும் தங்களது வருவாயை இழக்க நேரிட்டுள்ளது.
எவ்வளவு வருவாய்?
கொரோனா தொற்று நோயின் காரணமாக, சுற்றுலா வருவாய் குறையும். அதிலும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மூலம் வருடத்துக்கு 28 பில்லியன் டாலர் ஆகும். அதில் அக்டோபர் - மார்ச் வரை சராசரியாக 60-65% உள்ளது. ஆனால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்தே வைரஸின் பரவல் ஆரம்பித்ததனால் இதன் இழப்பு மிக அதிகமாகவே இருக்கும்.அதிலும் தற்போது இந்த பரவலானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவு பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஆபத்தில் பலரின் வேலை
இதே உள்நாட்டு பயணிகள் தற்போது தான் சம்மர் ஹாலிடே தொடங்கும் நேரம் என்பதால், பல இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பயணிப்பது தடைப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பயணிக்கும் விகிதம் குறைந்துள்ளது. சுற்றுலா செல்லும் இடங்களில் சென்று தங்குவதும் குறைந்துள்ளது. அங்கு உணவு அருந்துவதும் குறைந்துள்ளது. ஆக இப்படியாக சங்கிலி தொடராக லட்சக்கணக்கோரின் வேலை ஆபத்தில் உள்ளது.
சில நிறுவனங்கள் பணி நீக்கம்
சில நிறுவனங்கள் ஊழியர்களை சும்மா வைத்துக் கொண்டு சம்பளம் கொடுக்க முடியாது என்பதால் பணி நீக்கம் செய்து வருகின்றன. அதே நேரம் உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், போக்குவரத்து துறையில் வேலை செய்பவர்கள், ஹோட்டல்களில் பணி புரிபவர்கள் என அனைவரும் வேலை இழக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. எப்படி இப்படி ஒரு மோசமான நிலையிலிருந்து இந்தியா தப்பிக்க போகிறதோ தெரியவில்லை.
உலக போக்குவரத்து மற்றும் சுற்றுலா கவுன்சில் அறிக்கை
உலக போக்குவரத்து மற்றும் சுற்றுலா கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவில் தாக்கத்தினால் உலகம் முழுக்க இத்துறையில் 50 மில்லியன் பேர் தங்களது வேலையினை இழக்க கூடும் என்றும் கூறியுள்ளது. இதில் ஆசிய நாடுகள் பெரிய அளவிலான பிரச்சனையை சந்திக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இத்துறையானது இப்பிரச்சனையிலிருந்து மீண்டு வர 10 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜிடிபியில் பங்கு
சர்வதேச ஜிடிபி விகிதத்தில் சுற்றுலா துறையானது 10% பங்கு கொண்டுள்ளது.அதிலும் மேற்கூறிய 50 மில்லியன் பேரில் 30 மில்லியன் பேர் ஆசியாவில் தங்களது பணியினை இழக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான உலகளாவிய பயண இழப்புக்கு சமமான அளவு, 12 - 14% வரையிலான அளவில் இது வேலைகளை குறைக்க வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக