Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 11 மார்ச், 2020

புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது விவோ!

ருவழியாக விவோ நிறுவனம் அதன் Vivo Nex 3S 5G ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் தெளிவாகக் குறிப்பிடுவது போல, இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விவோ நெக்ஸ்3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
புதிய விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி அதன் முன்னோடியின் வடிவமைப்பைத் தக்க வைத்துள்ளது, ஆனால் புதிய ஸ்னாப்டிராகன் 865 சிப், மிகவும் திறமையான எல்பிடிடிஆர் 5 ரேம், வேகமான யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பு மற்றும் டூயல் மோட் 5 ஜி ஆதரவு போன்ற சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது.
மேலும், இந்த புதிய விவோ நெக்ஸ் 3எஸ் ஆனது அதன் மேம்பாடுகளின் பட்டியலில் எச்டிஆர் 10+ சான்றிதழையும் சேர்க்கிறது, இருப்பினும் விவோ நிறுவனம் அதன் வாட்டர்பால்ஸ் AMOLED டிஸ்ப்ளேவுடனேயே ஒட்டிக்கொண்டுள்ளது.
 புதிய விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன மெமரி வேரியண்ட்களின் கீழ் அறிமுகம் ஆகியுள்ளது? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
விலை மற்றும் விற்பனை:
 விவோ நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போனான இதன் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் ஆகியுள்ளது. அதே நேரத்தில் இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலானது தோராயமாக ரூ. 53,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்கை ப்ளூ, பிளாக் மற்றும் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. வருகிற மார்ச் 14 முதல் இதன் சீன விற்பனை தொடங்குகிறது, ஆனால் விவோவின் புதிய முதன்மை ஸ்மார்ட்போன் இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.
விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி டிஸ்பிளே, ப்ராசஸர் மற்றும் ரேம்:
 டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஃபன்டச் ஓஎஸ் 10 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.
 இது 6.89 இன்ச் அளவிலான எச்டிஆர் 10+ புல் எச்டி+ (1,080x2,256 பிக்சல்கள்) AMOLED வாட்டர்பால்ஸ் டிஸ்பிளேவை, 18.8: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 99.6 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது.
விவோவின் இந்த முதன்மை ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி கேமரத்துறை:
 இமேஜிங்கை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பாப்-அப் செல்பீ கேமரா அமைப்பு உள்ளது. உடன் எல்இடி ஃபிளாஷூம் உள்ளது.
இதன் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா (எஃப் / 1.8) உள்ளது, இது க்வாட்-செல் பிக்சல் பின்னிங் முறையிலான 16 மெகாபிக்சல் புகைப்படங்களை வழங்கும். உடன் 13 மெகாபிக்சல் வைட் அங்கிள் கேமரா + 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் (20x டிஜிட்டல் ஸூம்) ஆகியவைகளையும் கொண்டுள்ளாது. செல்பீகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா (எஃப் / 2.0) உள்ளது
விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி மெமரி, பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
 இதில் விரிவாக்கம் செய்யும் ஆதரவு இல்லாத 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பு உள்ளது. விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஆனது 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.
இது கஸ்டம் 44W அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.1, வைஃபை ஏ / பி / ஜி / என் / ஏசி, டூயல் ப்ரெக்வென்சி ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் கலிலியோ போன்றவைகளை கொண்டுள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால், விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஆனது 3.5 மிமீ ஹெட்ஜாக் உடன் வருகிறது. பாதுகாப்பு மற்றும் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது,
அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனில் அக்ஸலரோமீட்டர், கைரோஸ்கோப், காம்பஸ், ப்ராக்சிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் போன்ற சென்சார்களும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக