Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 மார்ச், 2020

கொரோனாவிடம் இருந்து தப்பிக்க கூகுள் செய்ய சொல்லும் 5 விஷயங்கள்! உங்களால் முடியுமா?

Google do the five

DO THE FIVE. Help stop coronavirus என்று கூகுள் அதன் ஹோம் பக்கத்தில், இந்த 5 விஷயங்களையும் செய்யவும், கொரோனா வைரஸை நிறுத்த உதவவும் என்று கூறி, அது சார்ந்த பாதுகாப்பு உதவிக்குறிப்புகளையும் வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் மாபெரும் பீதியை கிளம்பி, கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகளை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோக்கத்தின் கீழ் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் அதன் கூகுள் சர்ச் பக்கத்தில் "ஐந்து செயல்களைச் செய்யுங்கள். கொரோனாவை தடுக்க உதவுங்கள்" (DO THE FIVE, Help stop coronavirus) எனும் விழிப்புணர்வு பேனரைஅப்டேட் செய்துள்ளது.

அதை கிளிக் செய்ய, கொரோ பரவுவதை தடுப்பதற்காக நீங்கள் செய்ய வேண்டிய 5 செயல்களை பட்டியலிடுகிறது. அதில்:

1 - கைகள். அவற்றை அடிக்கடி கழுவ வேண்டும்.

2 - முழங்கை. அதற்குள் இரும்பிக் கொள்ளவும்.

3 - முகம். அதைத் தொடாதீர்கள்.

4 - இடைவெளி. 3 அடிக்கு மேல் இருங்கள்.

5 - உடம்பு சரியில்லையா? வீட்டிக்குள்ளேயே இருக்கவும்.

"இந்த கொரோனா விழிப்புணர்வை அப்டேட் செய்த முதல் 24 மணி நேரத்திலேயே, இந்த உதவிக்குறிப்புகளை மில்லியன் கணக்கானவர்கள் கண்டிருக்கிறார்கள்" என்று கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.


இது தவிர, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களிலிருந்து வெளியான COVID-19 சார்ந்த வீடியோக்கள் பயனர்களுக்கு எளிமையாக கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ், கூகுள் நிறுவனம் யூட்யூப் ஹோம் பேஜில் அவைகளை நோட்டிபிகேஷன்கள் வழியாக காட்சிப்படுத்துகிறது.

தவிர, உள்ளூர் வணிகம் அல்லது பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டால் கூகுள் தேடலும், கூகுள் மேப்ஸ் வழியாகவும் அது காண்பிக்கப்படும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக