Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 மார்ச், 2020

ஒரு வருட இலவச அன்லிமிடெட் சலுகையுன் ஜியோவின் eSIM சேவை தொடங்கியது!

samayam tamil
சிறிது காலமாக பேசப்பட்டு வந்த இ-சிம் தொழில்நுட்பம் (eSIM technology) ஒருவழியாக நடைமுறைக்கு வந்துள்ளது, அதுவும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் போட்டியாளரான ஏர்டெல் வழியாக! கூறப்படும் இ-சிம் என்றால் என்ன? எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் இந்த இ-சிம் ஆதரவினை பெற்றுள்ளது? குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் இ-சிம் ஆதரவினை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் எது? அதற்கு கிடைக்கும் சலுகைகள் என்ன? என்பதை பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்!
எந்த ஸ்மார்ட்போன் ஜியோ இ-சிம் சேவையை வழங்குகிறது?
இ-சிம் தொழில்நுட்பம் என்பது ஸ்மார்ட்போனில் ஒரு மெய்நிகர் சிம்மை (virtual SIM) வைத்திருக்க அனுமதிக்கும் ஒருதொழில்நுட்பம் ஆகும், அதாவது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பிஸிக்கல் சிம் தேவைப்பாடாது என்று அர்த்தம். கூகுள் பிக்சல் 4 அல்லது சமீபத்திய ஐபோன் போன்ற சில ஸ்மார்ட்போன்கள் இசிம் மற்றும் இயற்பியல் சிம் திறனை ஆதரிக்கின்றன என்றாலும் கூட, மோட்டோரோலா RAZR தான் இசிம்-ஐ மட்டுமே ஆதரிக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
ஜியோ இ-சிம் சேவையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பிரத்யேக சலுகை பற்றி?
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற சில மொபைல் ஆபரேட்டர்கள் மட்டுமே இசிம் சேவைகளை வழங்குகிறார்கள். முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, அதன் இ-சிம் சேவையை கட்டவிழ்த்து விட்டுள்ள மோட்டோரோலா RAZR ஸ்மார்ட்போனின் மீது ஓரு பிரத்தியேகமாக சலுகையையும் அறிவித்துள்ளது.
மோட்டோரோலா ரேஸர் மீதான "கனவில் கூட நினைக்காத சலுகைகள்" பற்றி?
மோட்டோரோலா RAZR மீதான விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் அதன் நெட்வொர்க்கின் கீழ் கூடுதலாக 1 ஆண்டு வரம்பற்ற சேவைகளை இலவசமாக வழங்குகிறது. மேலும் ஜியோ ஒரு வருடத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 700 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் அதன் டபுள் டேட்டா நன்மைகளை வழங்கும் ஆண்டு திட்டத்தையும் பட்டியலிட்டுள்ளது. ஜியோ மட்டுமன்றி ஏர்டெல் நிறுவனமும் மோட்டோரோலா RAZR ஸ்மார்ட்போனுக்கு eSIM சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா ரேஸர் (2019) ஸ்மார்ட்போனின் விலை என்ன?
இந்தியாவில் மோட்டோரோலா ரேஸர் (2019) ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.1,24,999 என்றுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நொயர் பிளாக் கலர் விருப்பத்தில் வருகிறது. மேலும், இது பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இதன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது மற்றும் ஏப்ரல் 2 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
மோட்டோரோலா ரேஸர் (2019) ஓஎஸ், டிஸ்பிளே, ப்ராசஸர் & ரேம் பற்றி?
ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான மோட்டோரோலா ரேஸ்ர் (2019) ஆனது 6.2 இன்ச் அளவிலான நெகிழ்வான OLED HD+ (876x2142 பிக்சல்கள்) டிஸ்ப்ளே உள்ளது. அது 21: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டுள்ளது. இதன் மேல் அட்டையில் உள்ள இரண்டாம் நிலை டிஸ்பிளே ஆனது 2.7-இன்ச் (600x800 பிக்சல்கள்) என்கிற அளவீட்டை கொண்டுள்ளது, இது பயனர்களை செல்பீ எடுக்க, நோட்டிபிக்ஃகேஷன்களை காண மற்றும் ம்யூசிக்கை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது - இவை அனைத்துமே ஸ்மார்ட்போனை திறக்காமலேயே செய்யலாம். இது 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC கொண்டு இயக்கப்படுகிறது.
மோட்டோரோலா ரேஸர் (2019) கேமராக்கள் பற்றி?         
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, மோட்டோரோலா ரேஸ்ர் (2019) ஒரு ஒற்றை முதன்மை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 16 மெகாபிக்சல் சென்சார் (எஃப் / 1.7) ஆகும். ஸ்மார்ட்போன் மடிந்த நிலையில் இருக்கும்போது இதே கேமரா அமைப்பானது செல்பீ கேமராவாக உருமாறும். இந்த ஸ்மார்ட்போனில் ஒரு தனி செல்பீ கேமராவும் உள்ளது, இது பிரதான டிஸ்பிளேவிற்கு மேலே உள்ளது, அது ஒரு 5 மெகாபிக்சல் சென்சார் ஆகும்
மோட்டோரோலா ரேஸர் (2019) மெமரி, கனெக்டிவிட்டி மற்றும் பேட்டரி பற்றி?
 மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாத 128 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போன்ற இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் "கன்னத்தில்" ஆப்டிகல் கைரேகை சென்சார் உள்ளது. இந்த மொத்த அமைப்பும் 2510 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக