>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 3 மார்ச், 2020

    விலை உயர்வு காணும் யமஹாவின் பிஎஸ்6 வாகனங்கள்- முழு விபரம்..!

     


    பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ள யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ பைக் கடந்தாண்டு நவம்பரில் விற்பனைக்கு வந்தது. அதை தொடர்ந்து யமஹா லைன்-அப்பில் உள்ள பல்வேறு பைக்குகள் புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.


    பிஎஸ்-6 வாகன விதிகளுக்கு உட்பட்டு யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள இருசக்கர வாகனங்கள் முந்தைய வெர்ஷனை விட அதிக விலையேற்றத்தைச் சந்தித்துள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் ஆபத்தை ஏற்படுத்தாத பிஎஸ்-6 வாகன விதிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் கரியமில வாயு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவதோடு, காற்று மாசு உருவாவதும் தடுக்கப்படும்.

    எனினும், பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஸ்-4 வெர்ஷனில் விற்பனையாகி வரும் வாகனங்களை மட்டுமே பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் முந்தைய வெர்ஷனை விட, புதிய பிஎஸ்-6 வாகனங்கள் கடும் விலை உயர்வை சந்திக்கின்றன.
     
    இந்த விலையேற்றம் இந்திய வாகனச் சந்தையை பாதிக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். விற்பனை வீழ்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் இந்திய வாகனத் துறை, பிஎஸ்6 நடைமுறைக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிடும் என்பது பலருடைய கருத்தாகவுள்ளது.

    நாட்டின் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் யமஹா மோட்டார் இந்தியா, தனது பிஎஸ்-6 வாகனங்களுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் யமஹாவின் ஒய்.இசட்.எஃப்-ஆர்15 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு யமஹா தயாரிப்பில் விற்பனைக்கு வந்த முதல் பைக் என்ற பெருமையும் ஒய்.இசட்.எஃப்-ஆர்15 மாடலுக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து எம்.டி-15 மாடலை கடந்த டிசம்பர் மாதம் அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.


    மேலும், அதே டிசம்பர் மாதத்தில் பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்ட ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டர், ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்.ஐ மோட்டார் சைக்கிள் மற்றும் ரே இசட்.ஆர் 125 எஃப்.ஐ ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களை யமஹா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் எஃப்.இசட்- 25 மற்றும் எஃப்.இசட்.எஸ்- 25 பைக்குகள் பொதுப் பார்வைக்கு செய்யப்பட்டன. இதில் பிஎஸ் 6 எஃப்.இசட்.எஸ்- 25 மாடல் வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
     

    எனினும், யமஹா நிறுவனத்தின் அனைத்து பிஎஸ்6 வாகனங்களும் முந்தைய வெர்ஷனுடன் ஒப்படும் போது குறிப்பிட்ட விலையேற்றத்தை சந்தித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் யமஹா நிறுவனம் விற்பனை செய்யும் பிஎஸ்-6 வாகனங்களின் விலை பட்டியலை கீழே காண்போம்.

    பிஎஸ்6 யமஹா இருசக்கர வாகனங்கள்:
    மாடல்கள்
    புதிய விலை
    FZ-FI
    ரூ. 99,200
    FZS-FI
    ரூ. 1.01 லட்சம் முதல்
    YZF R15 V3
    ரூ. 1.45 லட்சம் முதல்
    MT-15
    ரூ. 1.38 லட்சம் முதல்
    Ray ZR 125 FI
    ரூ. 66,730 முதல்
    Street Rally 125 FI
    ரூ. 70.730 முதல்
    Yamaha Fascino 125 FI (Drum)
    ரூ. 66.430 முதல்
    Yamaha Fascino 125 FI (Disc)
    ரூ. 68,930 முதல்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக