உத்தரப்பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக 8-ஆம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத தேவையில்லை என
அறிவிக்கப்பட்டுள்ளது!!
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள
வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது பழத்தை
கட்டிவருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். இதை தொடர்ந்து தற்போது இந்தியாவில்
காலூன்றியுள்ள கொரோனா வைரஸ் தனது பழத்தை கட்ட துவங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில்
149 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டுள்ளனர். அதில், 13 பேர்
குணமடைந்துள்ளனர், மூவர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை
தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்
ஒருகட்டமாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
அளிக்கபட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கொரோனா எதிரொலியாக 1
ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத தேவையில்லை
என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை
ஆல் பாஸ் எனவும் அவர்கள் தேர்வெழுத தேவையில்லை எனவும் உத்தரப்பிரதேச மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பயம் காரணமாக நடந்து வரும் தேர்வுகள் 8 ஆம்
வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் பரீட்சை இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு
உயர்த்தப்படுவார்கள் என்று இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
With all schools in Uttar Pradesh closed till April 2 in view of
coronavirus outbreak, students of classes one to eight of all government
primary schools to get promoted without having to appear in exams
— Press Trust of India (@PTI_News) March
18, 2020
பள்ளிகளை மூடுவதைக் கருத்தில் கொண்டு
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சரவையின் துணை முதல்வர் தினேஷ் சர்மா
தெரிவித்தார். "ஆண்டு முழுவதும் செயல்திறன் அடிப்படையில் மாணவர்கள் பதவி
உயர்வு பெறுவார்கள்." 2020 உயர்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலை தேர்வுகளுக்கான
விடைத்தாள்களின் மதிப்பீட்டை மாநில அரசு ஏப்ரல் 2 வரை ஒத்திவைத்துள்ளது.
கொரோனா பயம் காரணமாக ஆசிரியர்கள்
குழுக்கள் மதிப்பீட்டு மையங்களிலிருந்து விலகி இருந்ததை அடுத்து இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு செயல்முறையை ஒத்திவைப்பது இப்போது உயர்நிலைப் பள்ளி
மற்றும் இடைநிலைகளுக்கான முடிவுகளை அறிவிப்பதில் தாமதத்திற்கு வழிவகுக்கும்
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக