Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 மார்ச், 2020

ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸ்... Paytm பயன்படுத்த விரும்பும் மக்கள்...


ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸ்... Paytm பயன்படுத்த விரும்பும் மக்கள்...
நிதி தொழில்நுட்ப நிறுவனமான Paytm செவ்வாயன்று டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பாரியளவில் உயர்ந்துள்ளது. 
கொரோனா தாக்கத்தை அடுத்து அதிகமான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதனாலும், வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க ரூபாய் நோட்டுகளை தவிர்த்து டிஜிட்டல் கொடுப்பணவுக்கு நகர்ந்ததாலும் இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து Paytm செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்., "வழக்கமான நாட்களுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் கொடுப்பனவுகளில் 20 சதவீத வளர்ச்சியை நாங்கள் கண்டிருக்கிறோம். பிப்ரவரி முதல், Paytm பயன்பாட்டைப் பார்வையிடும் பயனர்களின் எண்ணிக்கையும், ஒரு பயனருக்கான அமர்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
"எரிபொருள் நிலையங்கள், பயன்பாட்டு கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு மீண்டும் மீண்டும் பரிவர்த்தனைகளில் பாரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆஃப்லைன் கொடுப்பனவுகள் 12 சதவீதம் அதிகரித்துள்ளன, ஏனெனில் அதிகமான மக்கள் பணத்தை விட Paytm-ஐ விரும்புகிறார்கள்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் திங்களன்று வங்கிகளிடம் டிஜிட்டல் கொடுப்பனவுகளை பயன்படுத்த ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பல டிஜிட்டல் கொடுப்பனவு நிறுவனங்கள் பரிவர்த்தனைகளில் சரிவைக் காண்கின்றன, எனினும் கடந்த ஒரு மாதத்தில் Paytm அதிக எழுச்சி பெற்றுள்ளது. காரணம் 16 மில்லியனுக்கும் அதிகமான வணிக தளத்துடன், Paytm அதிகமான வணிகங்களை ஆன்லைனில் பணம் செலுத்துவதை விரிவாக ஏற்றுக்கொள்கிறது என கூறப்படுகிறது.
நொய்டாவின் தலைமையிடமாக கொண்டுள்ள டிஜிட்டல் கொடுப்பனவு நிறுவனம், முடிந்தவரை பணத்தை தொடுவதைத் தவிர்ப்பதற்காக, உணவு மற்றும் மளிகை விநியோகத்திற்கும், பிற சேவைகளுக்கும் Paytm-ஐப் பயன்படுத்துவதை சலுகைகள் மூலம் ஊக்குவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) முன்னதாக கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகளில் பல நாட்கள் உயிர்வாழும் என்றும், பல கைகளில் இந்த நோட்டுகள் மாற்றிக்கொண்டே இருப்பதால் பணத்தின் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் பன்மடங்கு என்றும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக