Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 மார்ச், 2020

இலவசமாக சிக்கன் விற்ற கடைக்கு சீல்: புதுவையில் பரபரப்பு!

இலவசமாக சிக்கன் விற்ற கடைக்கு சீல்
கோழிக்கறியால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என பரவிய வதந்தி காரணமாக தமிழகம் முழுவதும் சிக்கன் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இலவசமாக சிக்கன் கொடுத்தால் சாப்பிடும்போது மக்கள், காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவதில்லை என்பதால் சிக்கன் கடைகளில் வியாபாரம் ஒட்டுமொத்தமாக சரிந்தது

இதனை அடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு சில கடைக்காரர்கள் சிக்கனை இலவசமாகவும், மிக குறைந்த விலைக்கும் விற்று வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கடையில் இலவச சிக்கன் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கண்டு அந்த கடையில் கூட்டம் அதிகமாக கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்து அந்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுச்சேரி முத்தியால்பேட்டை நகரில் உள்ள கோழிக்கடை ஒன்றில் கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வுக்காக இலவசமாக சிக்கன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலால் அந்த பகுதியில் உள்ள மக்கள் நூற்றுக்கணக்கானோர் அந்த கடை முன் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒருவித பதட்ட நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த தாசில்தார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கூட்டியதற்காக அந்த கடைக்காரரை விசாரித்ததோடு அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக