Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 மார்ச், 2020

இனிமேல் கொரோனா பற்றி போலி செய்திகள் பரவாது; கூகுள் அதிரடி!


Google Coronavirus Website

கூகுள் ஒரு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அது கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய தகவல்களை வழங்குகிறது!

 உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுள், முழுக்க முழுக்க கொரோனா வைரஸை பற்றிய அப்டேட்களை மற்றும் தகவல்களை அளிக்கும் வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து கூகுளின் "சகோதரி நிறுவனமான" வெர்லி, கொரோனா வைரஸ் சார்ந்த ஒரு பைலட் வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு கூகுள் இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Google.com/covid19/ வழியாக கிடைக்கப்பெறும் கூகுளின் இந்த புதிய வலைத்தளமானது அனைவருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய சமீபத்திய தகவல்களை தற்போது வழங்கி கொண்டிருக்கிறது.

எனவே உங்களுக்கு கொரோனா குறித்து ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் அல்லது குறிப்பிட்ட செய்தி உண்மையா என்பதை க்ராஸ் செக் செய்ய விரும்பினால் இதை பயன்படுத்தி கொள்ளவும்.

தேவை இல்லாமல் வாட்ஸ்அப் வழியாக அல்லது மீம்ஸ் வழியாக பரவும் போலியான செய்திகளை மற்றும் தகவல்களை நம்பி பீதி அடைய வேண்டாம். குறிப்பாக அதை ஷேர் செய்து மற்றவர்களையும் பயமுறுத்த வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை கிடைக்கப்பெற்ற தகவல் பற்றி க்ராஸ் செக் செய்யவும்.

கொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய விரிவான தகவல்களையும் இந்த வலைத்தளம் உங்களுக்கு வழங்கும். மேலும் றிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான 'டேப்கள்' ஹோம் பேஜிலேயே உள்ளன.

மேலும் உலக சுகாதார அமைப்பிற்கான (WHO) ஷார்ட்கட் இணைப்புகள் மற்றும் கொரோனா வைரஸ் பற்றிய கேள்வி பதில் டேப்களும் உள்ளன. உடன் கொரோனா வைரஸிற்கான தடுப்பு உதவிக்குறிப்புகள் குறித்து சி.டி.சி மற்றும் டபிள்யூ.எச்.ஓ ஆகியோரால் வழங்கப்ப்பட்ட யூடியூப் வீடியோக்களுக்கான டாஷ்போர்டு ஒன்றும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக