கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலகமே ஸ்தம்பிக்கும்
நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல.
இந்தியாவில் கொரோனா வைரஸைக்
கட்டுப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்
அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள், சந்தைகளுக்கு எல்லாம் மூடச் சொல்லி
இருக்கிறார்கள்.
எனவே தினக் கூலிகள், தள்ளு வண்டி
வியாபாரிகள் தொடங்கி, சின்ன சின்ன வேலகளைச் செய்து கொண்டிருக்கும் உதவியாளர்கள்
வரை, கையில் வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அலுவலக
வேலைகள்
அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு
உதவியாக இருக்கும் உதவியாளர்கள், சுத்தம் செய்பவர்கள் தொடங்கி வியாபார வேலைகளில்
ஈடுபடும் தற்காலிகத் பணியாளர்கள் வரை பலரையும் இந்த வைரஸ் நேரடியாக பாதித்து
இருக்கிறது. இந்த கொரோனா வைரஸால் இந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக
பணியாளர்களின் வேலை இழக்கும் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.
கம்பெனிகள்
கணக்கு
கம்பெனிகளோ, அத்தியாவசியமாக இருக்கும்
ஊழியர்களிடம் இருந்து கூடுமான வரை எல்லா வேலைகளையும் வாங்கிக் கொள்கிறார்கள்.
வீட்டில் இருந்த படியே அலுவலக வேலைகளை பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால்,
மேலே சொன்ன உதவியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தற்போது வேலை இல்லை. எனவே
அவர்களுக்கு சம்பளமும் கொடுக்க மறுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இண்டிகோ
உதாரணம்
இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை
நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, தன் ஊழியர்களுக்கான சம்பளத்தை 5 - 25 சதவிகிதம் வரை
குறைத்து இருக்கிறார்கள். தங்கள் நிறுவனத்தை இந்த கடுமையான பொருளாதார சூழலில்
நடத்த வேறு வழி தெரியவில்லை என்பதை கிட்டத் தட்ட நேரடியாக ஒப்புக் கொண்டு
இருக்கிறார்கள்.
வேலை
நீக்கம்
அவ்வளவு ஏன் ஒரு படி மேலே போய், தேவை
இல்லாத கூடுதல் ஊழியர்களை எல்லாம் வேலையில் இருந்து கூட நீக்கத் தொடங்கி
இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுன்களேன். கோ ஏர் கம்பெனி, தன் ஒப்பந்த
ஊழியர்களின் ஒப்பந்தங்களை நீட்டிக்க மறுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே சில
தினங்கள் முன்பு வரை ஒரு நல்ல வேலையில் இருந்தவர்கள் கூட, இன்று வேலை
இல்லாதவர்களாக, கையில் வருமானம் இல்லாதவர்களாக நடுத் தெருவுக்கு
வந்திருக்கிறார்கள்.
பிரதமர்
கோரிக்கை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
சமீபத்தில் கொரோனா வைரஸ் பற்றி பேசிய போது, உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான
சம்பளத்தை நிறுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தை யார் எப்படி
எடுத்துக் கொண்டார்களோ தெரிய வில்லை. டாடா நிறுவனம் படு சீரியஸாக எடுத்துக் கொண்டு
இருக்கிறது.
டாடா
உறுதி
இந்தியாவின் மிகப் பெரிய தொழில்
குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம், தன் கம்பெனிகளில் வேலை பார்த்துக் கொண்டு
இருக்கும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு, மார்ச்
மற்றும் ஏப்ரல் மதங்களில், முழு சம்பளத்தை கொடுப்பதை உறுதி செய்வதாகச் சொல்லி
இருக்கிறார்கள். கிட்டத் தட்ட சம்பளம் கொடுப்பதாக சத்தியம் செய்திருக்கிறார்கள்
என்றே சொல்லலாம்.
நிறைய
தற்காலிக பணியாளர்கள்
டாடா சொன்னது எல்லாம் ஒரு பக்கம்
இருக்கட்டும்.. அவ்வளவு எண்ணிக்கையில் தற்காலிக பணியாளர்கள் டாடா குழுமத்தில் வேலை
பார்க்கிறார்களா என்று கேட்டால், சரியான எண்ணிக்கை விவரங்கள் கிடைக்கவில்லை.
ஆனால், டாடா ப்ராஜெக்ட்ஸ் போன்ற டாடா குழும கம்பெனிகளில் கணிசமான அளவில் தற்காலிக
பணியாளர்கள் வேலை பார்க்கிறார்களாம். எனவே இந்த அறிவிப்பை பலரும் மனம் திறந்து
பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
என்னவாக
இருந்தாலும் ஓகே
வேலை பார்த்தால் தான் முழு சம்பளமா
என்று கேட்டால் அது தான் இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்
பட்டாலும் சரி, டாடா கம்பெனிகளில் வேலை கொடுக்க முடியாமல் போனாலும் சரி, மற்ற எந்த
காரணமாக இருந்தாலும் சரி, மார்ச் & ஏப்ரல் மாதத்துக்கு முழு சம்பளத்தைக்
கொடுக்க இருக்கிறார்களாம். சுருக்கமாக வேலை பார்க்கவில்லை என்றால் கூட 2 மாதம்
முழு சம்பளம் கொடுக்க இருக்கிறது டாடா குழுமம்.
இவர்களைப் போன்ற நல்ல கார்ப்பரேட்டுகள்,
நிறைய வளரட்டும். மனிதம் மலரட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக