Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 மார்ச், 2020

அச்சுறுத்தி வரும் கொரோனா.. உருவாகும் மாஸ்க் தட்டுப்பாடு.. எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா!

மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை
லகினையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவினையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் அமெரிக்காவில் மாஸ்க் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுவும் அமெரிக்காவில் இந்த தொற்று நோயின் மையமாக இருக்கும் வாஷிங்டன் மாநிலத்தில் மிகவும் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது.
ஒரு புறம் போதிய பிளாஸ்டிக் தாள்கள் இல்லாமல் மாஸ்க் தயாரிப்பு குறைந்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட மருத்துவ குழுவினரே இணைந்து சியட்டலில் மாஸ்க் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை
மேலும் இதற்காக அவர்கள் கூறியுள்ள காரணம் மருத்துவமனை ஊழியர்கள் சியாட்டலுக்கு தெற்கே உள்ள அறையில் ஒன்று கூடி, இந்த வைரஸினை கையாளும் விதமாக பேஸ் மாஸ்குகளை தயாரித்து வருகின்றனராம். அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் 51 மருத்துவமனைகளை இயக்கும் பிராவிடன்ஸ் செயின்ட் ஜோசப் ஹெல்த் நிறுவனத்தின் துணைத் தலைவர் மெலிசா டைசன் எங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். ஆக நாங்கள் அதிக ஏற்றுமதியினை எதிர்பார்க்கிறோம். அதுவரை நாங்கள் எங்களால் முடிந்த வரை மேம்படுத்தி தான் ஆக வேண்டும்.
நிலவி வரும் பற்றாக்குறை
அதிலும் தற்போது கொரோனா வழக்குகள் அமெரிக்காவில் 13,000ஐ தாண்டியுள்ள நிலையில், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முகமூடிகளின் பற்றாக்குறை இல்லாமல், அறுவை சிகிச்சை ஆடைகள் இல்லாமல் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆக அவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில், பேசிய அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மில்லியன் கணக்கான பேஸ்மாஸ்க்குகள் தயாரிப்பில் உள்ளதாக கூறியிருந்தார். எனினும் அது எப்போது கிடைக்கும் என விவரங்களை அவர்கள் கொடுக்கவில்லை.
முடங்கிய சீனா
உலகளவில் அதிகளவிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாஸ்குகளை சப்ளை செய்வது சீனா தான். எனினும் சீனாவில் தற்போது தான் கொஞ்சம் கொரோனா தாக்கம் குறைந்திருந்தாலும், உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு தேவையான மாஸ்கினை அதனால் அனுப்ப முடியவில்லை. இதனால் உலகளவில் பல நாடுகளில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அமெரிக்காவில் தாக்கம்
இந்த நிலையில் உலகம் முழுவதும் 2,45,660 பேரினை தாக்கத்தினை இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே 10,049 பேரினை பலி கொண்டுள்ளது. சீனாவில் இதன் தாக்கம் குறைந்திருந்தாலும், அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 14,339 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 217 பேர் பலியாகியுள்ளனர்.
வேண்டுகோள்
உலகளவில் இதனைப் போல் ஒரு தொற்று நோய் இருக்குமா என்பது தெரியவில்லை. இது போன்ற தாக்கத்தினையும் யாரும் பார்த்திருக்க முடியாது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்த தாக்கத்தினால் அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகள் இந்த மாஸ்க் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் நிலைமை
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலேயே இப்படி ஒரு பிரச்சனை எனில், கொரோனாவினை எதிர்க்க இந்தியா தற்போதிலிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு, அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக