Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 மார்ச், 2020

திருக்கைச்சினம் (கச்சினம்) திருக்கோயில்


 Image result for திருக்கைச்சினம் (கச்சினம்) திருக்கோயில்
றைவர் திருப்பெயர் : கைச்சினேஸ்வரர்,
இறைவியார் திருப்பெயர் : வெள்வளை நாயகி
தல மரம் : கோங்கிலவு
தீர்த்தம் : வச்சிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்
வழிபட்டோர் : அகத்தியர், இந்திரன், திருணபிந்து முனிவர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - தையலோர் கூறுடையான்.


தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 186 வது தேவாரத்தலம் ஆகும்.

இந்திரன், மணல் இலிங்கம் செய்து வழிபட்டுப் பின்னர் கைகளால் எடுக்க முற்படும்போது, பெயராமல், கையின் சின்னம் பதிந்தது. எனவே, இத்தலம் கைச்சி(ன்)னம் என்று பெயர் பெற்றுள்ளது.
கெளதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆஸ்ரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான். கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர். எனவே சேவலாக உருவெடுத்து ஆஸ்ரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். ""விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளது,''என்று சொல்லி விட்டு, அகலிகையுடன் சேர்ந்து இருந்தான்.

இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆஸ்ரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் ராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காக கல்லாக மாற்றினார்.சாப விமோசனம் பெறுவதற்காக, இந்திரன் சிவனை நினைத்து உருகி வழிபட்டான். சிவன் அவனிடம், விமோசனம் வேண்டுமானால், மணலால் லிங்கம் செய்து அபிஷேகம் செய்து வழிபடும்படி சொன்னார்.

மண்ணில் செய்த லிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? எனவே இந்திரன் இன்னும் பல காலம் துன்பப்பட்டான். செய்த தவறை நினைத்து உருகினான். கடும் குற்றம் செய்த அவனை சிவன் மன்னிக்கவில்லை.பின்னர் அம்பாளை நினைத்து தவமிருந்தான். இப்படியாக பல்லாண்டு கழித்தும் பலனின்றி, தான் அமைத்த லிங்கத்தைக் கட்டிப்பிடித்து, ""இனி பெண் வாசனையையே நுகர மாட்டேன்,'' எனக் கதறினான். அவனது விரல்கள் லிங்கத்தில் பதிந்து விட்டன.

தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன், நீண்ட நாள் கானக வாழ்வில் சிக்கிய அவனுக்கு விமோசனம் கொடுத்தார். 

கோவில் அமைப்பு:

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மதிற்சுவருடன் கூடிய கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் நேரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. 

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் உள் பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரகம், சுப்ரமணியர், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிகள் இருக்கின்றன. இறைவி வெள்வளை நாயகி சந்நிதி தனிக் கோவிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் உள்ளது. சுற்றுப் பிராகார கோஷ்டங்களில் முறையே ஜேஷ்டாதேவி, துர்க்காதேவி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். இந்திரன் ஐராவதத்தின் தந்தத்தால் செய்த வெள்வளையை அம்பிகைக்கு அணிவித்து வழிபட்டதால் அம்பிகைக்கு வெள்வளை நாயகி என்று பெயர் ஏற்பட்டது.

இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்திரன் சாபம் விலகியதும், தியாகராஜர் காட்சி தந்ததும், அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் விலகியதுமாகிய சிறப்புடைய இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள ரிஷபாரூட தட்சிணா மூர்த்தி. ரிஷபத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியவை பார்க்க வேண்டியவையாகும்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாச பெருமானின் அழகிய திரு உருவம் உள்ளது. இவ்வாலயத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தோண்டும் போது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள் சிலை இதுவாகும். மகாலட்சுமியின் சகோதரியாக கருதப்படும் ஜேஷ்டாதேவிக்கு (மூதேவி) இக்கோவிலில் தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

சிறப்புக்கள் :

கோச்செங்கணாரின் மாடக் கோவில். மதுரை ஆதீனத்திற்கு உட்பட்ட கோவில். இக்கோவிலில், 11 கல்வெட்டுகள் உள்ளன. அதில், சோழருடையது எட்டு, பாண்டியரது ஒன்று, விஜயநகரத்தரசனது இரண்டு, ஆக 11 உள்ளது.


போன்:  +91 94865 33293

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூர் - திருத்துறைபூண்டி பேருந்து பாதையில் உள்ளது. திருவாரூர், திருத்துறைபூண்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
இத்தலம் அகத்தியருக்கு பிரமகத்தி தோஷமும், இந்திரனுக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபமும் நீங்கிய திருத்தலமாகும். அர்த்தநாரீசுவரர் சந்நிதி, ரிஷபாரூட தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இத்தலத்தில் உள்ளன கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது கை அடையாளம் சுவாமி மீது படிந்தது என்பது தொன்நம்பிக்கை.
கோச்செங்கணாரின் மாடக் கோவில். மதுரை ஆதீனத்திற்கு உட்பட்ட கோவில்.
இந்திரன், மணல் இலிங்கம் செய்து வழிபட்டுப் பின்னர் கைகளால் எடுக்க முற்படும்போது, பெயராமல், கையின் சின்னம் பதிந்தது. எனவே, இத்தலம் கைச்சி(ன்)னம் என்று பெயர் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக