Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 மார்ச், 2020

சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம்- பிரதமர் மோடி முடிவு

Image result for சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம்- பிரதமர் மோடி முடிவு
பெண்கள் தினத்தன்று தனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று மூகவலைதளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப் போன்றவையில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.மோடியின் இந்த பதிவு அவரை பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் மார்ச் 8-ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்க்கையில் முன்னேறிய பெண்களை கௌரவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu — Narendra Modi (@narendramodi) March 3, 2020
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி , பெண்கள் தினத்தன்று தனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.பெண்கள் #sheinspiresUS என்ற ஹேஷ்டேக்கில் சாதனையை பதிவிடலாம் என்றும் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் அவரின் சமூக வலைதள கணக்கை ஒரு நாள் முழுவதும் நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக