Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

இந்திய சரித்திரம் போற்றும் இந்த மாவீரன் சாதாரண காய்ச்சலால் இறந்த சோகக்கதை தெரியுமா?

மராட்டிய சிங்கம் சிவாஜிக்கு பிறகு மராட்டிய பேரரசின் மிகப்பெரிய தலைவராக கருதப்பட்டவர் பேஷ்வா பாஜிராவ் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாஜிராவ் மஸ்தானி திரைப்படம் அவரின் காதல் வாழ்க்கையை உலகத்திற்கு வெளிப்படுத்தியது. ஆனால் அவரது வாழ்க்கையில் காதலையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளது.

பேஷ்வா பாஜிராவின் வரலாற்றை படித்தால் அவரின் ஆளுமை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று நாம் அறிந்து கொள்ளலாம். வரலாற்றுக்கு அதிக பரிட்சயம் இல்லாத இந்த மாபெரும் மராட்டிய வீரரைப் பற்றி தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஷ்வா பாஜிராவின் குழந்தை பருவம்

பேஷ்வா பாஜிராவ் அவரது வாழ்க்கையில் முதல்முறையாக போர்க்களத்திற்குச் சென்றபோது வெறும் 12 வயதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்கு காரணம், பாஜிராவின் தந்தை பாலாஜி விஸ்வநாத், சிறு வயதிலேயே ஒரு தலைவராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை தனது மகன் புரிந்து கொள்ள விரும்பினார். அவரின் 20 ஆண்டுகால இராணுவ வாழ்க்கையில் பேஷ்வா ஒரு போரில் கூட தோற்றதில்லை. சிறந்த போர்வீரன் என்பதைக் காட்டிலும் போர் வியூகம் தீட்டுவதில் பேஷ்வா வல்லவராக இருந்தார்.

இளம்வயது பேஷ்வா

இது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். நான்காவது மராத்தா சத்ரபதி ஷாஹுவால் பாஜிராவை பேஷ்வாவாக நியமித்தபோது அவருக்கு வயது வெறும் 20 தான். வரலாற்றின் மிக இளம்வயது பேஷ்வா இவர்தான். இளம்வயதிலேயே பேஷ்வாவாக நியமிக்கப்பட்டாலும் மராத்திய வரலாற்றின் மிகச்சிறந்த பேஷ்வா இவர்தான் என்பதில் சந்தேகமில்லை.

பிரிட்டாஷாரின் பாராட்டு

பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி பெர்னார்ட் மாண்ட்கோமெரி தனது புத்தகத்தில் 'இந்தியாவின் மிகச் சிறந்த குதிரைப்படை ஜெனரல்' பாஜிராவ் பேஷ்வாதான் என்று குறிப்பிட்டுள்ளார். இது பாஜிராவின் வலிமைக்கும், புகழுக்கும் சிறந்த சான்றாகும். இன்றுவரை பேஷ்வா பாஜிராவ் தான் இந்து மதத்தின் பாதுகாவலராக கருதப்படுகிறார். பல இஸ்லாமிய படையெடுப்புகளில் இருந்து இந்து மக்களை அரணாய் இருந்து பாஜிராவ் பாதுகாத்தார்.

இஸ்லாத்தை மதித்தார்

இஸ்லாமிய பேரரசர்களின் படையெடுப்பை எதிர்த்து பாஜிராவ் போரிட்ட போதிலும், பேஷ்வா பாஜிராவ் தனது பதவிக் காலத்தில் ஒருபோதும் இஸ்லாத்தின் நடைமுறைக்கு ஒரு தடையை கூட விதிக்கவில்லை எளிமையான உண்மை.

பேஷ்வா பாஜிராவின் புகழ்

பேஷ்வா பாஜிராவ் போர் உத்திகள் மற்றும் போர்க்களத்தில் வெற்றிபெற்றது அவருக்கு மிகவும் அதிகமான புகழைக் கொடுத்தது. அது மட்டுமின்றி அவரின் புகழ் என்பது அவரின் எதிரிகளின் மனதில் அவரின் மீதிருந்த பயத்தில் இருந்தது. பாஜிராவை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் அவர் சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தார். தன் வாழ்க்கையின் பல மணி நேரங்களை தியானத்தில் செலவிட்டார்.

பாஜிராவின் மரணம்

பாஜிராவின் மரணம் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது போல் நடைபெறவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும். பாஜிராவின் மரணம் அவரது இதயம் நொறுங்கியதால் ஏற்பட்டது, என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுவதற்கு மாறாக, பேஷ்வா பாஜிராவ் ஒரு மோசமான காய்ச்சலால் பிடிபட்டார் என்று பலர் நம்பினர். மேலும் அவர் தனது கட்டுபாட்டின்ன் கீழ் 100,000 படை வீரர்களுடன் டெல்லிக்கு செல்லும் போது தனது முகாமில் காலமானார்.

பேஷ்வா பாஜிராவ் மற்றும் மஸ்தானியின் மகன் ரம்ஜான் புனித நாளில் பிறந்தார் என்பது பெரும்பாலானவர்கள் அறியாத ஒன்றாகும். அவர்கள் அவருக்கு சம்ஷர் பகதூர் கிரிஷா சிங் என்று பெயரிட்டனர். உண்மையில், வரலாற்றாசிரியர்கள் சாம்ஷர் தனது தந்தையின் நகலாக இருந்தார் என்று கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக