மனிதனாக
பிறந்த அனைவருக்குமே பயம் என்பது கண்டிப்பாக இருக்கும். பயம் என்றால் என்ன? ஏன்
அது வருகிறது? நாம் ஏன் அதற்காக பயப்படுகிறோம்? போன்ற கேள்விகள் அனைவரின்
மனதிற்குள்ளும் நிச்சயம் இருக்கும். பயம் என்பது வரவிருக்கும் ஆபத்து அல்லது
தீமையால் ஏற்படும் வலி உணர்வாகும். இது கடந்த காலங்களின் மோசமான அனுபவங்களால்
ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் பயத்தை ஒவ்வொரு வழியில் அனுபவிக்கின்றனர்.
பயத்தை தவிர்ப்பதைக் காட்டிலும்
அதனை எதிர்கொள்வதே பயத்தை சமாளிப்பதற்கான சிறந்த வழியாகும். மனித இயல்பு மிகவும் சிக்கலானது.
ஆபத்து காலங்களில் அவர்கள் வலிமையாகவும், போட்டித்தன்மையுடனும், தைரியமாகவும் இருக்கக்
கற்றுக்கொண்டார்கள்.
மறுபுறம் அவர்களுக்குள் ஏதோ ஒரு பயம் இருக்கிறது. இந்த அச்சங்கள்
பகுத்தறிவு அல்லது நீண்ட காலமாக புதைக்கப்பட்ட அதிர்ச்சியின் காரணமாக நபருக்கு நபர்
மாறுபடும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு
பொதுவாக இருக்கும் பயம் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் உலகம் முழுவதும்
அதிகளவு மக்களுக்கு இருக்கும் பயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பறப்பது
உலகம்
முழுவதும் இருக்கும் மக்களுக்கு பொதுவான பயங்களில் ஒன்று பறப்பதாகும். விமானம்,
ஹெலிகாப்டர் போன்ற வாகனங்களில் பறப்பது கூட மக்களுக்கு பயமாகத்தான் இருக்கிறது.
இது சில நேரங்களில் ஏரோபோபியா என்றும் குறிப்பிடப்படுகிறது. பறக்கும் பயம் என்பது
ஒரு நபரின் விமானப் பயணத்தைத் தடுக்கிறது, அல்லது ஒரு நபர் விமானத்தில் பயணிக்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை
ஏற்படுத்துகிறது. இந்த பயத்தைப் போக்க ஆண்டதோறும் மில்லியன் கணக்கிலான பணம்
மக்களால் செலவிடப்படுகிறது.
நாய்கள்
நாய்களுக்கு
பயப்படுவது இன்றைய செல்லப்பிராணிகளை நேசிக்கும் சமூகத்தில் ஒரு சவாலாக உள்ளது.
அவர்கள் மனிதனின் சிறந்த நண்பராக இருக்கலாம், ஆனால் நாய்களும் ஒரு குறிப்பிட்ட
அளவு பயத்தை மனிதர்களுக்கு உண்டாகின்றன. பொதுவாக குழந்தைப்பருவத்தில் ஏற்படும்
மோசமான அனுபவங்களால் ஏற்படும் மனஉளைச்சல் காரணமாக அது பெரியவர்கள் ஆன பிறகும்
தொடங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக உங்களைத் தாக்கும் நாய் உங்களின் முகத்தில் பயத்தை
பார்த்தால் மட்டுமே அது உங்களை மேற்கொண்டு தாக்கும். நாய்களின் மீதான அசாதாரண பயம்
சினோபோபியா என்று அழைக்கப்படுகிறது.
சிலந்தி பூச்சி
செல்லும்
வழியில் சிலந்தி பூச்சி தரையில் வந்தால் அனைவருமே கண்டிப்பாக ஒரு நொடி
நடுங்குவார்கள். இங்கிலாந்தில் மிகக் குறைவான சிலந்திகள் மட்டுமே விஷம் உள்ளது
என்றாலும், இந்த நாட்டில் ஒரு மில்லியன் அராக்னோபோபிக்ஸ் இருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. சிலந்திகளின் பகுத்தறிவற்ற பயம் அராச்னோபோபியா என்று
அழைக்கப்படுகிறது. இந்த பயத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
உளவியல் பேராசிரியர் ஜான் மே அவர்களின் கருத்துப்படி அவற்றின் கோணலான கால்கள்,
அடர்ந்த நிறம் போன்றவற்றால் அவை எந்த பக்கம் நகரும் என்று கணிக்கமுடியாமல்
இருக்கிறது. கணிக்க முடியாத பல கால்களை உடைய அடர்ந்த சிறிய பூச்சிகளை பார்த்து
யார்தான் பயப்படாமல் இருப்பார்கள்.
எலி
எலிகளின்
மீதான பயம் முசோபோபியா என்று அழைக்கப்படுகிறது, இது மிகவும் பொதுவான ஒரு பயமாக
அறியப்படுகிறது. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் இவை கொடுக்கும் தொல்லைக்கு
எல்லையே இருக்காது. ஒரு அறையில் எலி இருப்பது தெரிந்து விட்டால் நம்மால் அங்கு
நிம்மதியாக தூங்க முடியாது. வெளித்தோற்றத்தில் அதற்கு நாம் பயப்படாதது போல
இருந்தாலும் மனதிற்குள் அதிகம் பயப்படுவோம். இதுதான் முசோபோபியா என்று
அழைக்கப்படுகிறது.
மரணம்
மனிதர்களாக
பிறந்த அனைவருக்குமே மரணத்தின் மீதான பயம் இருக்கும். சிலர் இறந்துவிட்டதாக
அஞ்சுகிறார்கள், சிலர் இறக்கப்போவதை நினைத்து அஞ்சுகிறார்கள். இருப்பினும் இந்த
பயம் உங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு இருந்தால் நிச்சயம் அது
பிரச்சினைதான். இந்த பயத்திற்கு தனடோபோபியா அல்லது நெக்ரோபோபியா என்று
அழைக்கப்படுகிறது.
இரத்தம்
இரத்தம்
குறித்த பயம், இரத்தத்தை பார்ப்பதற்கான பயம் ஹெமாடோபோபியா என்று அழைக்கப்படுகிறது.
இந்த பயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் சொந்த இரத்தம், பிறரின் இரத்தம்,
விலங்கின் இரத்தம் என எதனை பார்த்தாலும் பயப்படுகிறார்கள். சிலருக்கு இரத்த
நிறத்தை பார்த்தாலே பயமாக இருக்கும். காயம் மற்றும் மரணத்தின் இறுதி பாதிப்பு
ஆகியவற்றை இரத்தம் அவர்களுக்கு நினைவூட்டக்கூடும். உலகில் பெரும்பாலான மக்கள் இந்த
பயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உயரம்
பெரும்பாலான
மக்கள் உயரத்திற்கு செல்லும்போது இயற்கையான பயத்தை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்,
குறிப்பாக பாதுகாப்பு குறைவாக இருக்கும்போது அதிகம் பயப்படுகிறார்கள். பாதுகாப்பான
முறையில் உயரத்தில் இருக்கும்போது சிலர் பயப்படாமல் இருப்பார்கள், ஆனால் சிலரோ
பாதுகாப்பு இருந்தாலுமே உயரத்தை நினைத்து அதிகம் பயப்படுவார்கள். இது ஏன் என்பதை
அவர்கள் மட்டுமே அறிவார்கள். இவர்களுக்கு உயரம் என்பது மலை உச்சி, உயரமான கட்டிடம்
மட்டுமல்ல ஏணி, எஸ்கலேட்டர் கூட உயரம்தான்.
இருட்டு
தூங்கும்
நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலனோர் இருளை நினைத்து பயப்படுகிறார்கள்.
சிலர் தூங்கும்போது கூட இருளை பார்த்து பயப்படுகிறார்கள். இவர்கள் இருளில்
ஏற்படும் கற்பனை நிகழ்வுகளை நினைத்து பயப்படுகிறார்கள். பெரும்பாலான மக்கள், தூக்க
நிலையில் இல்லாதபோது இருளைப் பற்றி பயப்படுவார்கள், ஏனென்றால் இருண்ட பகுதிகள்
பெரும்பாலும் குற்றத்தின் காட்சியாக மாறும். பல சந்தர்ப்பங்களில் இந்த பயம்
பேய்கள் மற்றும் பிற மர்ம நபர்களின் பற்றிய பயமாக இருக்கிறது. இருளின்
அதிகப்படியான பயம் லைகோபோபியா என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு உண்மையான ஆபத்தை
ஏற்படுத்தாத தீவிர பயமாகும்.
இடிமின்னல்
உலகளவில்
இது ஒரு முதன்மையான பயமாக இருக்கிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் இருவருமே இடி
மற்றும் மின்னல் குறித்த பயத்தை வளர்த்து கொள்ளக்கூடும். இந்த பயம் அஸ்ட்ராபோபியா
என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக குழந்தைகள் இடிமின்னலுக்கு பயப்படுவார்கள்,
ஆச்சரியப்படும் விதமாக வளரும்போது இந்த பயம் குறைந்துவிடும். ஆனால் வளர்ந்த
பிறகும் சிலருக்கு இந்த பயம் இருக்க வாய்ப்புள்ளது.
பாம்பு
உலகின்
ஆபத்தான விலங்குகளில் பாம்பு ஒன்றாகும், மக்கள் அதிக பயப்படும் விஷயங்களிலும்
இதுதான் முதலிடத்தில் இருக்கிறது. பாம்புகளுக்கு பயப்படுவது மிகவும் பொதுவான
பயங்களில் ஒன்றாகும், ஆனால் பலரும் பாம்பை நேரில் பார்க்கா விட்டாலும் அதனை
நினைத்து பயப்படுவார்கள் . நமக்கு தீங்கு விளைவிக்கும் ஏதோவொன்றைப் பற்றி
பயப்படுவது மிகவும் சாதாரணமானதுதான். பாம்புகளுக்கு பயப்படுவது முற்றிலும்
இயற்கையானது மற்றும் பாம்பின் மீது ஆரோக்கியமான மரியாதையை குறிக்கிறது. பொதுவாக,
மக்கள் அவற்றின் விஷத்திற்காக பாம்புகளை நினைத்து அஞ்சுகிறார்கள், இதனால் மரணத்தை
நினைத்து அனைவரும் பயப்படுகிறார்கள். உலகில் மூன்றில் ஒருவர் பாம்பை நினைத்து
பயப்படுபவராக உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக