Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 28 மார்ச், 2020

கொரோனா வைரஸ்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சிறப்பு சேவை.! என்ன தெரியுமா?


ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை சரி செய்வதற்கென புதிய சேவையை அறிவித்து இருக்கின்றன. குறிப்பாக நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்கும் நோக்கில் இருநிறுவனங்கள் சார்பில் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியம், பயண வரலாறு

அதாவது இந்த புதிய சேவையில் ஆரோக்கியம், பயண வரலாறு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பயனரிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும், இதனை கொண்டு மக்கள கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்து கொள்ள முடியுமா, முடியதா என்பதை அவர்களாகவே கண்டறிந்து கொள்ள முடியும்.

ஜியோ நிறுவனம் டூல் மைஜியோ செயலியில் கிடைக்கிறது, இதனை அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைதளத்தில் இயக்க முடியும். இது பயனரின் வயது, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவருடன் தொடர்பு

கொண்டிருந்தீர்களா? ஆரோக்கியம் மற்றும் பயனர் மேற்கொண்ட பயண விவரங்களை கேட்கிறது.

மேலும் பயனர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில் ஜியோ பயனருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு, சராசரி மற்றும் அதிகம் என மூன்று நிலைகளில் தெரிவிக்கும் மூன்று நிலைகளில் பயனர் வேண்டிய வழிமுறைகளை ஜியோ வழங்குகிறது.

அதன்பின்பு ஜியோ டூல் கொண்டு தேசிய மற்றும் மாநில அளவில் பயனர் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்களை வழங்குகிறது, ஏர்டெல் டூல் அப்பல்லோ மருத்துமணையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.அப்பல்லோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜியோவை போன்றே ஏர்டெல் நிறுவனமும், பயனர் வயது, நோய் தொற்று அரிகுரி உள்ளிட்ட விவரங்களை வழங்க கோருகிறது. பின் பயனர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில் பரிந்துரிகைளை வழங்குகிறது. ஏர்டெல் சேவையில் ரிஸ்க் மீட்டர் அடிப்படையில் பட்டியிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் வழங்கும் சேவைகள் நொய் தொற்று பற்றிய அடிப்படை விவரங்களை மட்டுமே வழங்குகிறது. இதை வைத்து ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதும் போது,உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக