Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 28 மார்ச், 2020

15 நாட்களில் ரூ.53,000 கோடி வித்டிரா.. பயத்தில் மக்கள் செய்த காரியம்..!


21 நாள் ஊரடங்கு

பிரதமர் மோடி இந்தியாவில் அவசர நடவடிக்கையாக முதலில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தார். அன்றே மக்கள் நீண்ட நாள் வீட்டில் இருக்க வேண்டி வரும் என்பதைச் சுதாரித்துக்கொண்டனர். இதற்கு முக்கியக் காரணம் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்று தான் நடந்துள்ளது, மக்கள் செய்திகள் வாயிலாகத் தெரிந்துகொண்டனர். மக்கள் அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே

நீண்ட நாள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டும் என்பதால் அதற்காக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதற்காக மக்கள் அனைவரும் அதிகளவிலான பணத்தை வித்டிரா செய்துள்ளனர்.

16 மாத உயர்வு

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் 13ஆம் தேதி முடிவில் மட்டும் இந்திய மக்கள் சுமார் 53,000 கோடி ரூபாய் அளவிலான பணத்தை வித்டிரா செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 16 மாத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகத் திருவிழா மற்றும் தேர்தல் காலத்தில் தான் மக்கள் அதிகமான பணத்தை வித்டிரா செய்வது வழக்கம் ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது மக்கள் பணத்தை எடுத்துள்ளனர்.

இந்திய வங்கித் துறையில் இருந்து இந்தத் திடீர் பணம் வெளியேற்றம் அதிர்ச்சியாக இருந்தாலும், மக்கள் நீண்ட ஊரடங்கிற்குத் தயாராகும் முயற்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான பணத்தை வெளியில் எடுத்துள்ளது. இதன் மூலம் மார்ச் 13ஆம் தேதி முடிவில் இந்திய மக்களின் கையில் சுமார் 23 லட்சம் ரூபாய் உள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் இந்தி 23 லட்சம் ரூபாயும் தற்போது மிகவும் குறைந்த அளவிலான பணப் பரிமாற்றத்துடன் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது.

144 தடை உத்தரவு

நாடு முழுவதும் தற்போது 144 தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் எப்போதும் வேண்டுமானாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது என்பதற்காகத் தற்போது அதிகளவிலான பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுகின்றனர்.

ஈகாமர்ஸ்

நாடு முழுவதும் தற்போது மின்னணு சேவைகள் முடங்கிவிட்ட நிலையில், மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஆதரித்தாலும் மக்கள் அதிகளவில் பணத்தின் வாயிலாகவே பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மேலும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளங்கள் அதிகளவிலான சேவைகளை முடக்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஆப்லைன் சந்தையை நோக்கிச் சென்றுள்ளனர்.

வங்கி

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வங்கி தரப்புகள் ஏடிஎம்களில் பணத்தை நிரப்பு பணிகளைப் பல சவால்களைத் தாண்டி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக