Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 28 மார்ச், 2020

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா?


ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேக சேவை




ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய சேவை, சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடல்களான ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்ப்ளஸ் 7T ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரத்தியேகமாகக் கிடைக்கும்படி செய்துள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தற்போது சீனாவில் மட்டும் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
NFC அடிப்படையிலான பேமெண்ட் சேவை
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஒன்பிளஸ் பே சேவையை அரை வருடத்திற்கும் மேலாக உள்நாட்டில் பலகட்டமாகச் சோதனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் பே சேவை பயன்பாட்டைத் திறந்து ஒன்பிளஸ் பே சேவையை டிஃபால்ட் NFC அடிப்படையிலான பேமெண்ட் பயன்பாடாக அமைக்க வேண்டும்.
வெச்சாட் மற்றும் அலிபே பயன்பாட்டை முந்திய ஒன்பிளஸ் பே
அதற்குப்பின் பயனர்கள் அனைத்து வங்கி விவரங்களையும் ஒன்பிளஸ் பே சேவையில் பதிவு செய்ய வேண்டும். சீனாவில் பயன்படுத்தப்படும் வெச்சாட் மற்றும் அலிபேவுடன் ஒப்பிடும்போது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஒன்பிளஸ் பே சேவை வேகமாக இருப்பதாக இதைப் பயன்படுத்திய பயனர்கள் கூறியுள்ளனர். இந்த சேவை சீன ஒன்பிளஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் பே குயிக் பேமெண்ட் சேவை
இந்த ஒன்பிளஸ் பே சேவையின் தனிச் சிறப்பே டபுள் டேப் அம்சம் தான் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒன்பிளஸ் பே சேவையைப் பயன்படுத்தப் பயனர்கள் சுவிட்ச் ஆன் பட்டனை இரண்டு முறை கிளிக் செய்தால் போதும். குயிக் பேமெண்ட் செய்வதற்கு இரண்டு முறை பட்டனை அழுத்துவதன் மூலம் விரைவாக உங்கள் பயன்பாட்டைத் திறந்து பணம் செலுத்த முடியும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஒன்பிளஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு
சீன ஒன்பிளஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சேவை விரைவில் அனைத்து பயனர்களுக்குக் கிடைக்கும் விதத்தில் தயாராகி வருகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் பே சேவை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்களுக்கு ரெடி ஆகுங்கள்
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் அதிக பயனர்களை கொண்டுள்ளதால், ஒன்பிளஸ் பே சேவையை இந்தியாவில் விரைவில் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 லைட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக