கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ரூ.30 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. சுந்தரம் கிளைடான் நிறுவனமும் இதில் இணைந்துள்ளது. கொரோனா போன்ற கொடூர வியாதியை எதிர்த்துப் போராட நம் அனைவரின் ஆதரவும் தேவை என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவரான வேணு ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் முடங்கியுள்ள பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரச் சலுகைகளுக்கும் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.1.7 லட்சம் கோடி சலுகை மிக முக்கியமான அறிவிப்பு என்று டேஃப் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத் துறையினரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக