Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 மார்ச், 2020

வீடு வீடாக வரும் ரேஷன் பொருள்., zomato உடன் அரசு ஒப்பந்தம்: எப்படி தெரியுமா?





சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.
தற்போது வரை மருந்து இல்லை
இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்
அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.
14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் பொருட்களை விட அரசு கூடுதலாக அறிவித்து வருகிறது. மக்கள் கூட்டம் கூடாது என்பதால் இது வழங்கப்படும் முறை கேள்விக் குறியாக இருந்தது.
நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம்
அதன்படி ரேஷன் கடை பொருட்களை நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் சொமேட்டோ நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் 8 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ரேஷன் பொருட்களை வழங்கத் திட்டமிடப்பட்டிக்கிறது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு
அதேபோல் அடுத்த அடுத்த கட்டமாக வரும் வாரங்களில் திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட 17 பகுதிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும், அதை சொமேட்டோ ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக