இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை விட 24 வயது
குறைவான பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீப நாட்களாக இங்கிலாந்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும் அரசியல்வாதி என்றால், அது போரிஸ் ஜான்சன்தான். இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்மொழிவான ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுதலை நிறைவேற்ற முடியாமல் தொடர்ந்து இரண்டு பிரதமர்கள் பதவி விலகிய நிலையிலும் தொடர்ந்து பிரெக்ஸிட்டை நிறைவேற்ற போரிஸ் ஜான்சன் செய்த செயல்கள் உலகம் முழுவதும் அவரை பிரபலப்படுத்தின.
நாடாளுமன்றத்தை கலைத்து மறுதேர்தல் நடத்தி மீண்டும் பிரதமராகி பிரெக்ஸிட்டை நிறைவேற்றிய போரிஸ் ஜான்சன் தற்போது தனது காதல் வாழ்க்கையால் ட்ரெண்டாகி வருகிறார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான போரிஸ் தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
கேரிஸ் சைமண்ட்ஸ் என்ற அந்த பெண் போரிஸுடன் கன்சர்வேட்டிவ் கட்சியில் பணிபுரிந்தவர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் லிவிங் டூகெதர் பாணியில் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது கேரிஸ் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
200 ஆண்டுகால இங்கிலாந்து வரலாற்றில் பிரதமர் ஒருவர் தனது பணிக்காலத்திலேயே திருமணம் செய்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக