நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அச்சத்தை
அதிகிரித்து வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் தங்கள்
நாட்டின் முதல் கொரோனா வழக்கினை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இரானில் இருந்து பயணித்த பயணிகள்
மூலம் நாட்டில் கொரோனா பரவி இருப்பதாவும், இராச்சியம் வைரஸிலிருந்து
விடுபட்டுள்ளது மூன்று மாதங்கள் சீனாவிலிருந்து 66 நாடுகளுக்கு பரவியது எனவும்
சவுதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தகவலை உறுதிப்படுத்தும்
விதமாக, பாதிக்கப்பட்டவர் ஈரானில் இருந்து வளைகுடா இராச்சியம் வரை பஹ்ரைன் வழியாக
பயணித்ததாக அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முதல் கொரோனா நோயாளி தற்போது
தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவரை தொடர்பு கொண்ட
அனைவருமே பரிசோதிக்கப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியடப்படும் என
எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இரானில் கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 அதிகரித்து தற்போது 1501-ஆக
பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை
54-லிருந்து 66-ஆகவும் அதிகரித்துள்ளது. இதனிடையே மத்திய கிழக்கில் பாதிக்கப்பட்ட
அனைவருமே சமீபத்தில் ஈரானுக்கு பயணம் செய்திருக்கிறார்கள், அல்லது ஒருவருடன்
தொடர்பு கொண்டுள்ளனர் என அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பைச்
சேர்ந்த ஒரு குழு திங்களன்று தெஹ்ரானுக்கு மருத்துவத்துடன் வந்தது கிட்டத்தட்ட
100,000 பேரை சோதிக்க இருப்பதாகவ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தேவையான
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆய்வக கருவிகளுக்கான பொருட்கள், பாதுகாப்பு
உபகரணங்கள் அளித்திட சவுதி அரசு நல்கிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் குறித்த வழக்க முதலில்
துனிசியா-வில் வெளியானதாக தெரிகிறது. மேலும் குவைத்தில் 10 புதிய வழக்குகள், ஈராக்
மற்றும் பஹ்ரைனில் தலா 6 வழக்குகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் கத்தார் நாட்டில் மேலும் நான்கு, லெபனானில் மூன்று, ஈராக்கில் இரண்டு
மற்றும் எகிப்தில் இரண்டு வழக்கு பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில், இந்த கொரோனா வைரஸ் குறைந்தது
89,000 பேரை தாக்கி 3,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. இவற்றில்
பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்தவர்கள். சீனாவுக்கு வெளியே, ஈரான் மற்றும் வடக்கு
இத்தாலியில் 8,800-க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் 130 உயிர் இழப்புகள்
தெரியவந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக