எப்போதும்
நாம் ஒரு பொருளையே, மனிதர்களையே உருவத்தை வைத்தே எடை போடுகிறோம். அது சரியா? தவறா?
என்று இந்த கதை மூலம் பார்ப்போம்.
தையற்காரர்
ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் தன் மகனை
கடைக்கு கூட்டி சென்றார். தையற்காரர் வேலை செய்வதை அவனுடைய மகன் அருகில் இருந்து
பார்த்துக் கொண்டிருந்தான்.
தையற்காரர்
தனது கடைக்கு வந்த புது துணிகளை தைப்பதற்காக எடுத்து, அதனை அழகிய பளபளக்கும்
கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். வெட்டிய பின்னர் கத்திரிக்கோலைக் கால்
அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்க ஆரம்பித்தார். துணியை முழுவதும் தைத்து முடித்த
பிறகு, அவர் தைத்த சிறிய ஊசியை எடுத்து தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப்
பத்திரப்படுத்தினார்.
இதை
பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு குழப்பமாகியது. அது என்னவென்றால், கத்தரிகோல்
ஆனது மிகவும் விலை உயர்ந்தது, அதை அலட்சியமாக தூக்கி போடுகிறார், ஊசி சிறியது...
மலிவானது. ஆனால், அதை தலையில் பத்திரப்படுத்துகிறார் என்று.
தனது
மகனை பார்த்த தையற்காரர் என்ன குழம்பிக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்டார்.
'அப்பா ! கத்திரிக்கோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில்
போடுகிறீர்கள். ஊசி சிறியது... மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே.
அது ஏன்...?" என்று கேட்டான்.
மகனே,
'நீ சொல்வது உண்மைதான்" என்றார் தையற்காரர். 'கத்திரிக்கோல் அழகாகவும்,
மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது. அதாவது பிரிப்பது! அது ஒரு
குடும்பத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ நல்லதல்ல. ஆனால், ஊசி சிறியதாகவும்,
மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. இது அனைவருக்கும் நன்மை
தரக்கூடிய செயலாகும்.
தத்துவம் :
ஒருவருடைய
மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல.
குடும்பம் ஒரு அழகான தோட்டம் அதில் உறவுகள் குலுங்கும் மலர்கள். எனவே ஒரு மனிதன்
வாழ்நாளில் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழவேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர்
பிரிவினையை ஏற்படுத்தி பிரிந்து வாழ்தல் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக