Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 மார்ச், 2020

ஆண்களே ! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அர்த்தம்...!

How to Increase Sperm Count

ந்தவொரு மனித உயிர் உருவாவதற்கும் ஆண்களின் உயிரணுக்கள் என்பது அவசியமாகும். இன்று ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் குறைவாக இருப்பதுதான். விந்தணுக்கள் பொதுவாக வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும், எப்போதாவது மஞ்சள் நிறமாக வெளியேறும். ஆனால் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இரத்தத்துடன் வெளியேறுவது அரிதானது, கடுமையான உடல்நல பாதிப்பின் வெளிப்பாடு இது.
விந்தணுக்களின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமே, ஒலிகோஸ்பெர்மியா என்பது விந்தணுக்கள் குறைந்த விந்தணுக்களைக் கொண்டிருக்கும் நிலை மற்றும் மலட்டுத்தன்மையின் முக்கிய காரணங்கள் ஆகும். விந்து வெளியேறும் ஒரு மனிதன் ஒரு மில்லிலிட்டருக்கு 20 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்களைக் கொண்டிருப்பதால் இந்த நிலையில் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. விந்தணுக்கள் முழுமையாக இல்லாதது அசோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. இந்த பதிவில் விந்தணுக்களின் எண்ணிக்கையை எப்படி இயற்கையாக அதிகரிப்பது என்று பார்க்கலாம்.

விந்தணுக்களின் ஆயுர்வேத பார்வை
ஆயுர்வேத உரை "சரகா சம்ஹிதா" விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை உயர்த்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முழு அத்தியாயத்தையும் கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில், ஒலிகோஸ்பெர்மியா சுக்ரானு அல்பாட்டா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் தினசரி, ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், வேகமான வாழ்க்கை காரணமாக மன அழுத்தம் மற்றும் உழைப்பு காரணமாக இது ஒரு பொதுவான பிரச்சினையாகும். ஆயுர்வேதம் விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை அதிகரிப்பதன் மூலம் ஆண் கருவுறுதலை அதிகரிக்க பல வழிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் அறிகுறிகள்
ஒலிகோஸ்பெர்மியாவின் முதல் அறிகுறி கருவுறாமை ஆகும், அதனைத் தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், விதைப்பையில் வலி, ஆண்குறியில் இருந்து திடமான திரவம் வெளியேற்றம், விறைப்புத்தன்மையில் பிரச்சினை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள்
தொற்றுக்குள்ளாக்கப்பட்ட விந்தணுக்கள், இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, மிகவும் சூடான நீரில் குளிப்பது, நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, அதிக எடையுடன் இருப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைந்து கொழுப்பு அடுக்குகள் விந்தணுக்களில் படிந்து விடுகின்றன, அடிக்கடி விந்தணுக்கள் வெளியேறுவது, அதிகளவு புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல், அதிகளவு மனஅழுத்தம், ஜிங்க் ஊட்டச்சத்து குறைபாடு, வெரிகோஸ் குறைபாடு, சில மருந்துகள் போன்றவை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய காரணமாக அமைகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிகளை மேற்கொண்டு பார்க்கலாம்.
கட்டுப்பாடான சுயஇன்பம்
சுயஇன்பத்தால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றாலும் அதிகளவு சுயஇன்பம் செய்யாமல் இருப்பது நல்லது. குறிப்பிட்ட இடைவெளி விட்டு சுயஇன்பம் செய்யலாம். அதேசமயம் அதிகாலை நேரத்தில் உறவு வைத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் விந்தணுக்களின் அளவு பெரும்பாலும் காலையில் அதிகமாக இருக்கும்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்
ஆல்கஹால் உங்கள் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கிறது, இதன் விளைவாக ஈஸ்ட்ரோஜன் அளவு வியத்தகு அளவில் உயர்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு பானங்கள் கூட விந்தணு உற்பத்தியில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வெந்நீர் குளியலை தவிர்க்கவும்
எப்போதும் வசதியான மற்றும் தளர்வான உள்ளாடைகளை அணியவும். மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும், பிறப்புறுப்பை சுற்றி எப்போதும் சூடான பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம். முடிந்தளவு குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கைக்கு நல்லது. விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க ஆயுர்வேதம்
வெள்ளை முஸ்லி
பாலியல் வலிமையை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ள ஒரு நன்கு அறியப்பட்ட ஒரு உணவு என்றால் அது வெள்ளை முஸ்லிதான். இந்த மூலிகை பெரும்பாலும் ஒரு மனிதனின் பாலியல் சக்தி மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கும் திறனுக்காக "மூலிகை வயக்ரா" என்று அழைக்கப்படுகிறது.
அஸ்வகந்தா
பாலியல் திறனை அதிகரிக்க அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இதுவாகும். இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது, உடல் வலிமையை மேம்படுத்துவது மற்றும் விந்து உற்பத்தியை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் பாலியல் செயல்திறனை அதிகரிக்கிறது. இந்த மூலிகை இந்திய ஜின்ஸெங் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இதில் உயிர் மற்றும் பாலியல் இயக்கத்தை மேம்படுத்துவதற்கான புத்துணர்ச்சி சக்திகள் உள்ளன.
அஸ்பர்கஸ்
பழங்காலம் முதலே ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்க அஸ்பர்கஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வழக்கமான நுகர்வு பாலியல் தூண்டுதல் மற்றும் விறைப்புத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் நீடிக்கும். அஸ்பர்கஸ் ஒரு மனிதனை பலவிதமான பாலியல் செயலிழப்புகளிலிருந்து வியத்தகு முறையில் புத்துயிர் பெறவும், பாலியல் உறுப்புகளை வலுப்படுத்தவும், இனப்பெருக்க அமைப்பில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஒலிகோஸ்பெர்மியாவிற்கு சிறந்த தீர்வாக இது இருக்கிறது.
பால்+நெய்+சர்க்கரை
விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க இந்த உன்னதமான கலவை மிகவும் நல்லது. பொதுவாக, இனிப்பு, கொழுப்பு, சத்தான மற்றும் மனதிற்கு இன்பம் தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நெய், பால், சாதி அரிசி, உடாத் பருப்பு, கருப்பு திராட்சை, முட்டை, மீன் போன்ற உணவுப் பொருட்கள் கருவுறாமை, ஒலிகோஸ்பெர்மியா, அசோஸ்பெர்மியா, முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க சரக்க சம்ஹிதா போன்ற ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 கருத்து: