சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 489399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த நோயால் சுமார் 22149 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 694 பேர் பாதிக்கப்பட்டு அதில் 14 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவில் கொடூரத்தன்மை இப்போதைக்கு முடியாது என பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அதனால் இந்தியவில் பிரதமர் மோடி,வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பல வல்லரசு நாடுகளே கொரொனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் திணறிவருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் சிகிச்சை அளித்த முறையான பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிப்பது பற்றி உலக நாடுகள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை எடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே இந்த பழமையான முறையாகும்.
முதலில், இம்முறை, அம்மைத்தொற்று, தொற்று நோய்களுக்காக இது பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் உலக அளவி பரவிய ஜிகா, சார்ஸ், எலோபா ஆகிய வைரஸ் தொற்றுகளுக்கும் இம்முறை சோதித்துப்பார்க்கப்பட்டது.
இதுவே தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இம்முறை சீன மருத்துவர்கள் சோதித்துப்பார்த்து உள்ளதாகவும், அமெரிக்க மருத்துவர்கள் இந்த சிகிச்சை முறை பற்றி, உணவு மற்றும் மருத்து நிர்வாகத்து அனுப்பியுள்ளதாகவும் , இம்முறை நிச்சயம் பயனளிக்கும் என ஜான்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் அர்டுரோ என்பவர் காஸாடேவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக