Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனோ தாக்கம்... மல்லிகை மலர் விற்பனை கடும் பாதிப்பு... ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.50 இலட்சம் இழப்பு என தகவல்...


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவு தற்போது  அமல்படுத்தப்பட்டுள்ளதால்  சத்தியமங்கலம் பூ சந்தையும் தற்போது  விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மல்லிகைப்பூ  செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கும் பணி நடைபெறவில்லை. 

இதனால் பூ நடவு செய்த விவசாயிகளுக்கு  கடும் நட்டமடைந்துள்ளது.  ஒரு சில  விவசாயிகள் மலர்கள் பறிக்கப்படாததால் செடிகளை மாடுகளை  மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். தற்போது குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூ உற்பத்தி நாளொன்றுக்கு 20 டன்னாக அதிகரித்துள்ளது.

தற்போது  மல்லிகை பூவின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ ரூ.250க்கு விற்றாலும் 20 டன் என கணக்கிட்டால் சுமார் ரூ.50 லட்சம் இழப்பு ஒவ்வொரு விவசாயிக்கும்  ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின்  தாக்கம் காரணமாக மல்லிகைப்பூ மட்டுமின்றி  முல்லை, காக்கடா, செண்டு, கோழிக்கொண்டை, சம்பங்கி  என பல்வேறு மலர்கள்  இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளதால் பல லட்சக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக