கொரோனா வைரஸ் குறித்து பலவேறு தனியார் தொண்டு நிறுவங்கள்
விழிப்புணர்வு செய்து வந்ததையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு தொலைபேசி
காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு
செய்து வருகின்றனர்.
ஒருவருக்கு போன் செய்ததும் ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்கும் அந்த குரல்
பின்னர் கோரோனா வைரஸ் பரவாமல் இருக்க அறிவுரை வழங்குகிறது.
நம் உறவினர்களுக்கோ , நண்பர்களுக்கோ போன் செய்யும்போது இந்த காலர் டுயூனால் பலரும் பதறிப்போகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் மாதவன் தனது ட்விட்டர்
பக்கத்தில் " இப்போது நான் யாருக்கு போன் செய்தாலும் முதலில் வரும் அந்த இருமல்
சத்தத்தை கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது. மேலும், மிகுந்த பயமாகவும் உள்ளது.
இது பாராட்டத்தக்க காரியமாக இருந்தாலும், அந்த இருமல் சத்தத்தை மட்டும் நீக்கி விடுங்கள்.
நான் கால் செய்யும் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என
கூறியுள்ளார்.
எந்த அபாயகரமான காரியமாக இருந்தாலும் அதனை மீம்ஸ் போட்டே கலாய்த்து விடுகிறார்கள் நம்ம ஊரு இளைஞர்கள். இந்நிலையில் தற்போது மாதவன் இப்படி கூறியிருப்பது சராசரி மனிதர்களின் எண்ணங்களில் இருந்து நடிகர் மாதவனின் கருத்தும் பிரதிபலிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக