>>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 11 மார்ச், 2020

    முடிவு தெரியாத வாழ்க்கை... கூடவே கூடாத செயல்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

    நோயாளி : என்ன டாக்டர் நேத்து வரைக்கும் பிரச்சனை ஒன்னும் இல்ல. மைனர் ஆப்ரேஷன்னு சொல்லிட்டு திடீர்னு இப்ப மேஜர் ஆப்ரேஷன்னு சொல்றீங்க.
    டாக்டர் : திடீர்னு ஒரு இடம் விலைக்கு வரும்னு நானும் எதிர்பாக்கலியே.
    நோயாளி : 😩😩
    ----------------------------------------------------------------------------------------------------------
    திருடன் 1 : போயும் போயும் ஒரு டீச்சர் வீட்ல திருடப் போனது ரொம்ப தப்பா போச்சுடா..
    திருடன் 2 : ஏன்டா எதுவும் கிடைக்கலையா?
    திருடன் 1 : பீரோ முழுக்க கத்தை கத்தையா வெறும் எக்ஸாம் பேப்பர் தான்டா இருக்கு..
    திருடன் 2 : 😞😞
    ----------------------------------------------------------------------------------------------------------
    ராமு : இந்த எம்.எல்.ஏ கால்நடைத்துறைக்கு அமைச்சராக ஆசைப்படுறார்னு எதை வெச்சு சொல்ற?
    பாபு : தலைவரை பாக்கும் போதெல்லாம், கட்சிக்காக மாடா உழைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே...
    ராமு : 😜😜
    ----------------------------------------------------------------------------------------------------------

    கூடாத செயல்கள்...!!
    👉 மகன் தந்தையின் கண்ணீரை பார்க்கக்கூடாது.
    👉 பெற்ற பிள்ளைகளின் அவப்பெயரை தாய் கேட்கக்கூடாது.
    👉 சகோதரர் உடன்பிறப்புகளிடம் அந்தஸ்து காட்டக்கூடாது.
    👉 தம்பதிகளிடையே சந்தேகம் வரக்கூடாது.
    👉 வெற்றியாளருக்கு இறுமாப்பு கூடாது.
    👉 தலைவனுக்கு நொடிப்பொழுது சபலமும் கூடாது.
    👉 வாழ்ந்து கெட்டவனின் வறுமையை தூற்றக்கூடாது.
    👉 பகைவனாக இருந்தாலும் ஒருவரின் இறப்பில் மகிழக்கூடாது.
    👉 கடும்பசியிலும் மதியாதவர் வீட்டில் உணவு உண்ணக்கூடாது.
    👉 தர்மம் செய்பவரை தடுக்கக்கூடாது.
    ----------------------------------------------------------------------------------------------------------
    தமிழின் சிறப்பு...!!
    ல, ழ, ள பொருள் வேறுபாடு
    🌟 அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
    🌟 அழகு - வனப்பு
    🌟 அளகு - சேவல், பெண்கூகை
    ----------------------------------------------------------------------------------------------------------
    🌟 அலகம் - திப்பிலி
    🌟 அளகம் - வெள்ளெருக்கு, நீர்
    ----------------------------------------------------------------------------------------------------------
    🌟 அலகை - கற்றாழை, பேய்
    🌟 அளகை - அளகாபுரி, பெண்.
    ----------------------------------------------------------------------------------------------------------
    வாழ்க்கை...!!
    முடிவு தெரியாத வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்
    நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக