நோக்கியா 8.2 5G, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா ஒரிஜினல் சீரிஸ் பீச்சர் போன் உடன் அறிமுகமாகவுள்ள நோக்கியா 5.2 ஆனது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு அறிமுகம் ஆகும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது.
நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை
பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் வருகிற மார்ச் 19 அன்று லண்டனில் ஒரு வெளியீட்டு
நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வின் போது நோக்கியா 8.2 5ஜி, நோக்கியா
5.2, நோக்கியா 1.3 மற்றும் ஒரிஜினல் சீரிஸ் பீச்சர் போன் ஆகியவைகள் அறிமுகமாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் ஆனது கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க் இணையதளத்தில் 'எச்எம்டி குளோபல் கேப்டன் அமெரிக்கா' என்கிற மாடல் பெயரின்கீழ் காணப்பட்டுள்ளது.
அந்த கீக்பெஞ்ச் பட்டியலின் படி, நோக்கியா 5.2 ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் க்வால்காம் ஆக்டா கோர் ப்ராசஸர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். மேலும், நோக்கியா 5.2 ஆனது ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயங்கும் என்பதையும் அந்த பட்டியல் வெளிப்படுத்துகிறது.
இந்த பட்டியல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் சிப்செட் பெயரை வெளிப்படுத்தவில்லை, ஆனால் முன்னதாக வெளியான வதந்திகளின் படி, இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660, 665 அல்லது 632 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும்.
முன்னதாக லீக் ஆன நோக்கியா 5.2 புகைப்படம் ஆனது, அடிவாரத்தில் நோக்கியா பிராண்டிங் பொறிக்கப்பெற்ற வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு இடம்பெறும் என்பதை வெளிப்படுத்தியது. பின்புறத்தில் க்வாட்-கேமரா அமைப்பு மற்றும் அதற்கு கீழே நோக்கியா பிராண்ட்டிங் உடனான கைரேகை சென்சார் இடம்பெறும்.
நோக்கியா 5.2 ஆனது 6.2 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து பிராந்தியங்களுக்கும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது, ஆனால் சில நாடுகளில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கிடைக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, நோக்கியா 5.2 ஆனது 16 மெகாபிக்சல் முதன்மை கேமராவுட 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை சென்சாருடன் வரும்.
முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இது 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும். இந்த மொத்த அமைப்பும் ஒரு 3,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். இதன் விலை (இந்திய மதிப்பின்படி) தோராயமாக ரூ.13,300 இருக்கலாம். இருப்பினும், துல்லியமான விலை நிர்ணயத்தை அறிந்துகொள்ள மார்ச் 19 வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக