Yes
bank விவகாரத்தையடுத்து போன்பே பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில்
பேடிஎம் மற்றும் போன்பே இருவருக்கும் டுவிட்டரில் மோதல் ஏற்படும் ரீதியிலான
கருத்தகள் வெளியிட்டு வருகின்றன.
5 பில்லியன்
பரிவர்த்தனைகள்
இந்தியாவின்
முன்னணி டிஜிட்டல் பேமன்ட் நிறுவனமான Phonepe, கடந்த டிசம்பர் மாதம் 5 பில்லியன்
பரிவர்த்தனைகளைக் கடந்ததாக அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய
பேமன்ட் நிறுவனமான Phonepe செயல்பட்டு வருகிறது
1 வருடத்தில் 5 மடங்கு
வளர்ச்சி
இந்த
நிறுவனம் 2018 வருட இறுதியில் 1 பில்லியன் பரிவர்த்தனைகள் தங்களின் சேவை மூலம்
மேற்கொண்டதாக தெரிவித்தது. இந்த நிலையில் 2018 இறுதியில் 5 பில்லியன் பரிவர்த்தனை
நடந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதன்மூலம் ஒரே வருடத்தில் 5 மடங்கு
வளர்ச்சி அடைந்தது.
1,500 கோடி ரூபாய்
இழப்பை சந்தித்த yes bank
இந்த
நிலையில் வாராக்கடன், சரியில்லா நிர்வாகம் போன்ற காரணங்களால் நிதி நெருக்கடியில்
சிக்கி தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
இதன் காரணமாக அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது
ரிசர்வ் வங்கி.
ரூ. 50,000 மட்டுமே
எடுக்க முடியும் என அறிவிப்பு
அடுத்த
ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50ஆயிரம்
ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் எனவும் மருத்துவம், கல்வி, திருமணம்
போன்ற தவிர்க்க முடியாத செலவிற்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய்
வரை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன்பே
நிறுவனத்தையும் சேர்த்து பாதித்த அறிவிப்பு
இந்த
விவகாரமானது யெஸ் வங்கியுடன் பெரும் வர்த்தக பங்குதாரராக இருக்கும் போன்பே
நிறுவனத்தையும் பாதித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து நேற்று மாலை முதல் போன் பே
நிறுவனத்தின் வர்த்தகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும் அதன் வாடிக்கையாளர்கள்
தெரிவித்தனர்.
நீண்ட நேர தடைக்கு
வருந்துகிறோம்: போன்பே
இந்த
விவகாரத்தையடுத்து போன்பே நிறுவனம் இதற்கு விளக்கமளித்தது. அதில் போன்பே-ன் நீண்ட
நேர தடைக்கு வருந்துகிறோம். எங்கள் பங்குதாரர் யெஸ் வங்கியை ஆர்பிஐ
கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்களின்
பொறுமைக்கு நன்றி
இந்த
சிக்கலை விரைவில் சரி செய்ய இரவு முழுவதும் பாடுபடுகிறோம். சில மணிநேரத்தில் இந்த
சிக்கல் நீக்கப்படும். உங்களின் பொறுமைக்கு நன்றி., கூடுதல் தகவல்களுக்கு
காத்திருங்கள் என தெரிவிக்கப்பட்டது.
எங்களோடு
இணைந்துவிடுங்கள்: பேடிஎம்
இதையடுத்து
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் இதற்கு டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும் வகையில்
டுவிட் ஒன்று செய்தது. அதில், டியர் போன் பே, தங்களை பேடிஎம் வர்த்தகத்திற்கு
அழைக்கிறோம். எங்களிடம் ஏற்கனவே ஏணைய நிறுவனங்கள் கூட்டு வைத்துள்ளது உங்கள் தடையை
நீக்கி மீட்டுத் தருகிறோம், மேலும் வணிகத்தை பலமடங்கு தடையின்றி சேவையாற்ற
முடியும் என தெரிவித்துள்ளனர்.
அப்படி மீண்டு வருவது தேவையில்லை: போன்பே
இதற்கு உடனடியாக பேடிஎம்ற்க்கு பதிலடி
கொடுத்துள்ளது. டியர் பேடிஎம் பேங்க், தங்களுக்கு டிஜிட்டர் பரிவர்த்தனை செய்வதில்
தடையிருக்குமென்றால் சொல்லவும், உங்களை தங்களோடு சேர்த்துக் கொள்கிறோம். எங்களின்
நீண்ட நாள் பங்குதாரர் சரிவை சந்திக்கும் நேரத்தில், அவர்களை விட்டு வெளியேறுவது
அர்த்தம் இல்லை. எங்களுக்கு அப்படி மீண்டுவருவது தேவையில்லை எனவும்
தெரிவித்துள்ளனர்.
சிக்கலை தீர்த்து., தொடருங்கள் என அறிவித்த போன்பே
போன்பேயின் இந்த கருத்துக்கு அனைத்து
தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து போன்பே டுவிட்டரில்,
நெருங்கிவிட்டோம், அதிவிரைவில் அனைத்து சிக்கலும் சரி செய்யப்பட்டு மீண்டும்
பரிவர்த்தனை தொடங்கப்படும், தங்களின் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி என
தெரிவித்துள்ளனர். அதேபோல் அடுத்த டுவிட்டில் நாம் மீண்டும் வந்துவிட்டோம் என
பதிவிட்டு. பரிவர்த்தனை தொடங்கலாம் என அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக