கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் நிலையில்
ஸ்விகியன் அதிரடி செயலுக்கு அதன் வாடிக்கையாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இத்தாலியில்
அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு
சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலியில்
அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர்
உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன்,
ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில்
160 பேருக்கு கொரோனா
மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா,
எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர்
உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு
இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
3,500
பேருக்கு கொரோனா பாதிப்பு
இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு
கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள்
மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு
நாடுகளிலும் கொரோனா அச்சம்
பல்வேறு நாடுகளிலும் கொரோனா அச்சம்
காரணமாக பொருளாதாரம் உள்ளிட்ட ஏணைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல்
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அந்தந்த நாட்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
பிரபல
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி
இந்த நிலையில் பிரபல உணவு டெலிவரி
நிறுவனமான ஸ்விக்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவுடன் சேர்த்து கைகழுவும்
சானிடைஸர் பாக்கெட் ஒன்றையும் இலவசமாக வழங்கி வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்வை
அதன் வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படமாக பதிவிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள்
பாராட்டு
அந்த வாடிக்கையாளரின் பாராட்டு
பதிவுக்கு பலரும் வரவேற்பு அளித்து வந்த நிலையில் இதற்கென நேரம் ஒதுக்கி தங்களை
பாராட்டியமைக்கு நன்றி என ஸ்விகி டுவிட்டரில் பதிலளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக