ஹுவாய் நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய ஸ்மார்ட் டிவிக்கு ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் மிரட்டலான சிறப்பம்சம் ஒன்றை ஹுவாய் நிறுவனம் தனது போஸ்டரில் வெளியிட்டுள்ளது. ஹுவாய் நிறுவனத்தின் முதல் பாப் அப் கேமராவுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்படுகிறது.
ஸ்மார்ட் டிவியின் எதிர்பார்ப்புகள்
புதிய ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி கண்டிப்பாகச் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவியை விட பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாண்டு வெளியிடப்பட்ட ஸ்மார்ட் டிவியில் 120 Hz ரெபிரெஷ்ஷிங் ரேட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருந்தது, இத்துடன் இந்த டிவியில் ஆறு 65W ஸ்பீக்கர்கல் மற்றும் ஹோங்கு 818 குவாட் கோர் செயலியுடன் வெளியிடப்பட்டது.
காத்திருக்கலாம்புதிய ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி நிச்சயம் கடந்த வருடம் வெளியான ஸ்மார்ட்டிவி அம்சங்களை விட மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரேம் மற்றும் சேமிப்பக திறன்கள் உட்பட வரவிருக்கும் ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவியில் சில மேம்பாடுகளை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குக் காத்திருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக