நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்கு தெளிவாக புலப்படுபவர் இவர். மாறாத குணம் உள்ளவர். பேதமின்றி எல்லோருக்கும் ஒளி கொடுப்பவர்.
நம் கண்ணுக்குள் ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் செல்பவரும் சூரிய பகவானே.
மேலும் சூரியன் அழியா புகழை கொடுப்பவராகவும், சமூக சேவையில் நாட்டத்தை கொடுப்பவராகவும், எளிமையாக இருக்க கற்றுக் கொடுப்பவராகவும், இரக்க உணர்வை கொடுப்பவராகவும் இருக்கிறார். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால், சூரியனைப் 'பித்ரு காரகன்" என்று அழைப்பார்கள்.
லக்னத்தில் 10-ம் வீட்டை உத்தியோகஸ்தானம், ஜீவனஸ்தானம் என்று அழைப்பார்கள். ஒருவரின் ஜீவனம், கௌரவம், சபைகளில் முக்கியத்துவம், தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் பற்றி 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல முடியும்.
லக்னத்திற்கு 10-ம் இடத்தில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் தெய்வத்தால் காக்கப்படுவார்கள்.
10 இல் சூரியன் நின்றால் என்ன பலன்?
👉 செல்வாக்கு உடையவர்கள்.
👉 தனம் சேர்ப்பதில் வல்லவர்கள்.
👉 நிர்வாக திறமை உடையவர்கள்.
👉 மனோபலம் அதிகம் கொண்டவர்கள்.
👉 வீர சாகசங்களில் ஆர்வம் உடையவர்கள்.
👉 உடல் ஆரோக்கியம் அமைய பெற்றவர்கள்.
👉 நிரந்த தொழில் அல்லது வேலை இருக்கும்.
👉 தன் முயற்சியால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.
👉 பொதுக்காரியங்கள் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
👉 அரசு அல்லது அரசியல் சார்ந்த தொடர்புகளை கொண்டவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக