வியாழன், 9 ஏப்ரல், 2020

12ம் வீட்டில் சூரியன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சூரியன் ஒளிக்கு அதிபதி, முக்குணம் உடையவர். அதாவது பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆவார். சூரியனுக்கு சொந்தவீடு சிம்மம். உச்ச வீடு மேஷம். நீச்ச வீடு துலாம். தகப்பனைக் குறிக்கக்கூடிய கிரகமும் சூரியன்தான். ஜாதகத்தில் சூரியன் பலமாக நின்றால், ஜாதகரின் தந்தைக்கு ஆயுள் நன்றாக இருக்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சில குறிப்பிட்ட அமைப்புகளுக்கு சூரியனே பொறுப்பு. ஒருவருடைய ஜாதகத்தில் தந்தையின் நிலையை பற்றி, சூரியனின் பலத்தை வைத்தும், ஒன்பதாம் பாவம் பற்றி சூரியனின் அதிபத்தியத்தை கொண்டும் அறியலாம்.

12-வது வீட்டை மோட்ச ஸ்தானம், விரய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே கூறலாம். மேலும் துன்பங்கள், பாவங்கள், வறுமை, துர்திஷ்டம் ஆகியவற்றையும் பற்றி இந்த வீட்டை வைத்தே கூற வேண்டும்.

லக்னத்திற்கு 12ம் இடத்தில் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் பலவீனமாக இருப்பார்கள்.

12ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

👉 உழைத்து முன்னேற்றம் காணக்கூடியவர்கள்.

👉 செய்யும் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

👉 தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

👉 தனது விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

👉 சிலருக்கு சந்ததி குறைபாடுகள் இருக்கும்.

👉 கபட எண்ணம் உடையவர்கள்.

👉 அனுபவ அறிவு அதிகம் உடையவர்கள்.

👉 எதிலும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.

👉 வினோதமான கண்ணோட்டங்களை உடையவர்கள்.

👉 ஏமாற்றுவதில் ஆர்வம் உடையவர்கள்.

👉 சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

👉 கண்பார்வைக் குறைபாடுகள் உண்டாகும்.

👉 மாந்திரீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்கள்.

👉 திருத்தலம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளக்கூடியவர்கள்.

👉 புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்