Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

ஏப்ரலில்14 நாள் லீவாம்! தேதிய பாத்து வெச்சிக்குங்க!

கொரோனா

உண்மையாகவே வங்கிகளுக்கு இது போதாத காலம் போலத் தான் தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவின் அரசு வங்கிகள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் சந்தேஸரா போன்றவர்கள் வாங்கிய கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

    இதனாலேயே இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போதுமான பணம் இல்லாமல் தவங்கிக் கொண்டு இருக்கிறது.

    கொரோனா

    இவை எல்லாவற்றுக்கும் இதுவரை ஒரு நல்ல தீர்வைக் காண மத்திய அரசு முயன்று கொண்டு இருக்கிறது. அந்த தீர்வுகள் எல்லாம் நடைமுறைக்கும் வருவதற்குள், கொரோனா வைரஸ் வந்து, ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. தற்போது கிட்டத்தட்ட உலகத்தில் 9.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 48,500 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

    வர்த்தகம் காலி

    இதனால் கடன் கொடுத்த வங்கிகள், ஒழுங்காக தங்கள் கடன் தவணைகளை திருப்பி வசூலிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில், ஆர் பி ஐ வேறு இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்து இருக்கிறது. பல அரசு வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 3 தவணைகளை ஒத்திப் போட அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இதனால் வங்கி செயல்பாடே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து இருக்கிறது என்று சொல்லலாம்.

    ஷட் டவுன்

    கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவாமல் இருக்க 21 நாட்களுக்கு ஷட் டவுன் அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. இதனால் ஏற்கனவே வங்கிக் கிளைகள் குறைவான நேரத்துக்கு மட்டுமே திறந்து வைக்கிறார்கள். அதோடு குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திலும் இருக்கிறார்கள். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    வாடிக்கையாளர்கள்

    போதாக்குறைக்கு விடுமுறைகள் வேறு இந்த ஏப்ரலில் குவிந்து கிடக்கிறது. எத்தனை நாட்கள் என்று கேட்டால், சுமார் 14 நாட்கள் விடுமுறையாம். எப்படி, எந்த எந்த தேதிகள் எல்லாம் விடுமுறை வருகிறது என்பதை அடுத்த பத்தியில் விரிவாகப் பார்ப்போம். இதில் வேடிக்கை என்ன என்றால் ஏற்கனவே 2 நாள் விடுப்பு கழிந்துவிட்டது. விடுமுறை தேதிகள்

    முதல் இரண்டு வாரங்கள்

    01 ஏப்ரல் 2020 ஆண்டு வங்கி நிறைவு நாள்

    02 ஏப்ரல் 2020 ராம நவமி

    05 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை

    06 ஏப்ரல் 2020 மகாவீர் ஜெயந்தி

    10 ஏப்ரல் 2020 புனித வெள்ளி

    11 ஏப்ரல் 2020 இரண்டாம் சனிக் கிழமை

    12 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை

    13 ஏப்ரல் 2020 பிஜு திருவிழா, போஹக் பிஹீ, செய்ரோபா (Cheiraoba), பைசாகி (Baisakhi)

    14 ஏப்ரல் 2020 அம்பேத்கர் பிறந்த நாள், வங்காளி புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, விசு, போஹக் பிஹூ

    மூன்றாவது & நான்காவது வாரம்

    15 ஏப்ரல் 2020 ஹிமாச்சல் நாள், போஹக் பிஹூ

    19 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை

    20 ஏப்ரல் 2020 கரிய பூஜா

    25 ஏப்ரல் 2020 நான்காம் சனிக் கிழமை, பரசுராமர் ஜெயந்தி

    26 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை என ஆர்பிஐ வலைதளத்தில் பட்டியல் நீள்கிறது.

    தமிழகத்துக்கு

    இதில் எந்த தேதிகள் எல்லாம் தமிழகத்துக்கு விடுமுறையாக இருக்கும் என்பதையும் கொடுத்து இருக்கிறோம்.

    01 ஏப்ரல் 2020 ஆண்டு வங்கி நிறைவு நாள்

    06 ஏப்ரல் 2020 மகாவீர் ஜெயந்தி

    10 ஏப்ரல் 2020 புனித வெள்ளி

    11 ஏப்ரல் 2020 இரண்டாம் சனிக் கிழமை

    14 ஏப்ரல் 2020 அம்பேத்கர் பிறந்த நாள், தமிழ் புத்தாண்டு

    25 ஏப்ரல் 2020 நான்காம் சனிக் கிழமை ஆகிய தேதிகள் தமிழகத்தில் வங்கிகள் விடுமுறை எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ வலைதளம்.

    திட்டமிடுங்கள்

    இந்த தேதிகளில் வங்கிக் கிளைகளுக்குச் சென்று செய்ய வேண்டிய வேலைகள் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள். பெரும்பாலும் ஆன்லைனிலேயே எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ளப் பாருங்கள். தமிழகம் இல்லாமல் மற்ற பகுதிகள் விடுமுறை என்றால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அல்லது வெளி மாநிலங்ளுக்குச் செல்லும் காசோலைகள் (செக்) க்ளியர் ஆக நாள் எடுக்கலாம். எனவே இந்த விடுமுறைக்குத் தகுந்தாற் போல உங்கள் வங்கி சேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக