பொதுவாக தங்க நகை மற்றும் நிலம், வாகனம், ஏன் பங்கு சந்தையில் உள்ள பங்குகளை அடகு வைத்து கூட கடன் பெற முடியும் என்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது பிற நிதிசார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் இன்சூரன்ஸ் பாலிசியை பிணையாகக் கொண்டு கடனை அளித்து வருகின்றன.
எந்த பாலிசியை வைத்து கடன் வாங்கலாம்
இந்தக் கடன் திட்டமானது யூலிப் மற்றும் மணி பேக் பாலிசி, எண்டோவ்மென்ட் பாலிசிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் வழங்கப்படும் கடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொருத்து வழங்கப்படும். எனினும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு இந்த கடன் வழங்கப்படுவதில்லை. ஏனெனில் டெர்ம் திட்டங்களில் மற்ற பாலிசிகளை போல் வருமானம் நிச்சயம் அல்ல இல்லையா.
எவ்வளவு கடன்?
இவ்வாறு இன்சூரன்ஸினை அடகு வைத்து கடன் வாங்கலாம் சரி, எவ்வளவு வாங்கலாம். உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியின் சரண்டர் மதிப்பில் 80% வரை கடனாக பெற முடியும். இந்த கடன் அளவானது பாலிசி காலம் அதிகரிக்கும் நிலையில், சரண்டர் மதிப்பும் அதிகரிக்கும். ஆக உங்கள் பாலிசி முடிவடையும் இறுதி காலத்தில் நீங்கள் வாங்கும்போது இன்னும் அதிகளவு கடன் வாங்க முடியும்.
பாலிசியின் சரண்டர் மதிப்பில் நீங்கள் 90% வரை கடன் பெற முடியும்.
வங்கிகளை பொறுத்தவரை இது பாதுகாப்பான கடன் என்பதால் பரிசீலனை கட்டணம், வட்டி விகிதம் உள்ளிட்டவை மற்றவற்றோடு ஒப்பிடும்போது வட்டி குறைவு தான்.
நீங்கள் பாலிசி எடுக்கும் போதே அனைத்து ஆவணங்களையும் கொடுத்து தான் எடுப்பீர்கள் என்பதால், இங்கு கொடுக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறைவு தான்.
இது அடமானக் கடன் என்பதால் சிபில் குறித்த கவலை தேவையில்லை. சிபில் குறைவாக இருந்தாலும் சில நேரங்களில் கடன் கிடைக்ககூடும்.
மேலும் இது பாதுகாப்பான அடமானக் கடன் என்பதால் விரைவாக பெற்றுக் கொள்ள முடியும்.
இதில் பாதகம் என்ன?
நீங்கள் அனைத்து பிரீமியத்தினை செலுத்திய பின்னரே இதன் மூலம் கடன் பெற முடியும். அதாவது பாலிசியின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு உங்களால் இந்த கடனுக்கு விண்ணபிக்க முடியாது. பாலிசியை அடமானமாக வைத்து கடன் வாங்கும் பட்சத்தில் கடன் வழங்கும் நிறுவனத்துக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. இப்படி ஒரு நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் நாமினி க்ளைம் செய்ய முடியாது.கடன் கொடுத்த வங்கியோ அல்லது நிறுவனமோ இதன் மூலம் க்ளைம் செய்ய முடியும். ஆக கடன் தொகையை முழுவதும் எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் தொகையைத் தான் நாமினிக்கு வழங்கும். ஆக பாலிசி மூலம் கடன் வாங்குவது, குறுகிய காலத்திற்கு நல்ல விஷயமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக