கோவையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு இருந்த கூலி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல சுமார் 170 கி. மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.
செல்லும் வழியில் இவர்கள் சேலம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். காவலர்கள் தலையிட்டு இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இவர்கள் அனைவரும் கோவையில் இருந்து தங்களது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறினார்.
மேலும், உணவு சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தனர். உடனே, காவலர்கள் தங்களிடம் இருந்த உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில், மாஸ்க் ஆகியவற்றைக் கொடுத்தனர்.
இவர்களுடன் ஏழே வயதான சபரிநாதன் என்ற சிறுவனும் காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து சென்றதைப் பார்த்து காவலர்கள் வருத்தம் அடைந்தனர்.

நாடு முழுவதும் முன்னறிவிப்பு இன்றியும், கால அவகாசம் கொடுக்காமலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், தங்குவதற்கு இடம் இன்றி, உண்ண உணவின்றி கூலித் தொழிலாளர்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது இந்தியா கொரோனா தொற்றில் முதல் நிலையில்தான் இருந்தது. அப்போது, கால அவகாசம் கொடுத்து, அறிவிப்பு செய்து இருக்கலாம். லாக்டவுன் என்ற வார்த்தையை முதன் முறையாக படித்தவர்களே அறியும் நிலையில், ஏழைகள், கூலித் தொழிலாளர்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்.
இதன் பின்னரும் கூட, சில மாநிலங்கள்தான் இவர்களை அரவணைத்துக் கொண்டன. பல மாநிலங்களிலும் சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளர்கள் குப்பையில் கிடைக்கும் வாழைப் பழங்களையும், உணவையும் உண்டு வருகின்றனர். நாளைய இந்திய நம்பிக்கையாளர்கள் என்று கூறப்படும் இளைஞர்களின் மனதில் விரக்தியை ஏற்படுத்தியது போன்ற சம்பவம் நடந்து முடிந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக