>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 8 ஏப்ரல், 2020

    சிவபுராணம்..!பகுதி 194

    தேவர்களின் வேந்தனான தேவேந்திரனுக்கு பஞ்ச பூதங்கள் யாவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதை கட்டுப்படுத்தும் தானே உயர்ந்தவன்... பெரியவன்.... என்று அவர் மனதில் எண்ண துவங்கினார். இவ்வகையான எண்ணமே தேவர்களின் துன்பத்திற்கு வழி அமைக்கத் துவங்கியது. அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பரம்பொருளான எம்பெருமான் மற்றும் உமையவளும் கைலாயத்தில் வீற்றிருந்த சமயத்தில் தேவேந்திரன் எம்பெருமானை காண கைலாயம் வந்து கொண்டிருந்தார்.

    அவ்வேளையில் தேவேந்திரன் தானே பெரியவன் என்ற ஆணவத்தோடு வந்து கொண்டிருந்தார். தேவேந்திரனின் எண்ணம் அறிந்து அவரின் ஆணவத்தை போக்குவதற்காக ஒரு திருவிளையாடல் புரிய துவங்கினார் எம்பெருமான். அதாவது எம்பெருமான் துவாரபாலகன் உருவம் கொண்டு கைலாய மலையின் நுழைவு வாயிலில் வீற்றிருந்தார். அப்போது அங்கு வந்த தேவேந்திரன், எம்பெருமானை காண வேண்டி இருப்பதாக உரைத்துக் கொண்டிருந்தார். ஆனால், துவாரபாலகன் உருவத்தில் இருந்து வந்த எம்பெருமான் எவ்விதமான பதிலையும் உரைக்காமல் தேவேந்திரனை கண்டும் காணாததுமாக இருந்து வந்தார்.

    இதைக் கண்டதும் தேவேந்திரனுக்கு சினமானது அதிகரிக்கத் துவங்கியது. அதாவது துவாரபாலகனுக்கு இவ்வளவு அகந்தை ஆகாது என்று கூறி தான் உரைத்த கேள்விக்கு பதில் யாது? என்னும் வகையில் நின்று கொண்டிருந்தார். இம்முறையும் துவாரபாலகன் ஏதும் உரைக்காமல் அமைதி காத்துக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த தேவேந்திரன் துவாரபாலகனே... உனது அழிவை நீயே தேடிக் கொண்டாய் என்று உரைத்து தம் மனதில் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தை எண்ண கணப்பொழுதில் வஜ்ஜிராயுதம் வரவே அதை துவாரபாலகன் மீது தாக்க துவங்கினார்.

    துவாரபாலகன் உருவத்தில் இருந்து வந்த எம்பெருமான் மீது வஜ்ஜிராயுதம் தாக்க வஜ்ஜிராயுதமானது பொடிப்பொடியாக சிதற துவங்கியது. நிகழ்வது யாது? என்று இந்திரன் உணர்வதற்குள் அங்கே அநர்த்தம் உருவாக துவங்கியது. இந்திரனின் இத்தாக்குதலால் மிகவும் சினம் கொண்ட சிவபெருமான், தனது சுய உருவத்தில் காட்சி அளிக்க அவரது நெற்றிக்கண் திறந்து அதிலிருந்து கோப கனலானாது உருவாகத் துவங்கியது. பின்பு, தாம் செய்த செயலால் ஏற்பட்டுள்ள விபரீதத்தை அறிந்ததும் இந்திரதேவன், எம்பெருமானிடம் தனது பிழையை மன்னித்தருள வேண்டினார்.

    இந்திரதேவன் கூறியதைக் கேட்ட எம்பெருமான் வலிமை கொண்டவர்கள் வலிமை இல்லாதவர்களை அரவணைத்து செல்ல வேண்டுமே தவிர தன்னுடைய வலிமையால் அவர்களை துன்புறுத்துதல் ஆகாது. நீர் செய்த செயல் எவ்வகையில் தர்மமாகும் என்று உரைக்கப்போகின்றாய் என்று சினத்துடன் உரைத்து தனது கோவப் பார்வையை தேவேந்திரன் மீது செலுத்த துவங்கினார். எம்பெருமானின் கோப கனலானது தேவேந்திரனை நோக்கி செல்லத் துவங்கியது. தன்னை அழிக்க வரும் கோவ கனலைக் கண்டதும் தேவேந்திரன் அச்சம் கொண்டு ஓட துவங்கினார். எம்பெருமானின் கோப கனலானது தேவேந்திரன் செல்லுமிடமெல்லாம் நோக்கி அவரை துரத்தத் துவங்கியது.

    அச்சமயத்தில் பார்வதி தேவி அவ்விடத்திற்கு வந்து தேவேந்திரனின் பணிகளின் முக்கியத்துவம் பற்றி சிவபெருமானிடம் கூறி தேவேந்திரனுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை தவிர்க்க முயன்றார். பின்பு, தேவேந்திரனும் தனது தவறினை உணர்ந்து எம்பெருமானின் திருவடிகளை தொழுது தனது பிழையை மன்னித்தருள வேண்டினார். கருணைக்கடலான எம்பெருமான், தேவி உரைத்த கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்து சினம் தவிர்த்து சாந்த சொரூபம் கொண்டு தேவேந்திரன் செய்த பிழையை மன்னித்தருளினார். ஆனால், எம்பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து உருவான கோப கனலானது அவ்விடத்தில் தேவேந்திரனை தாக்க முற்படுகையில் அந்த கோப கனலை தடுத்து கடலில் எறிந்தார்.

    எம்பெருமானின் கோப கனலானது ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி தேவர்களின் இன்னல்களுக்கு காரணமாகும் என்பதை மும்மூர்த்திகள் மட்டும் அறிந்ததாகும். எம்பெருமானின் கோபக்கனலானது கடலில் விழுந்ததும் ஒரு வலிமை மிக்க குழந்தையாக தோன்றியது. அந்த குழந்தையை கடலின் அரசன் எடுத்து வளர்த்து வந்தார். குழந்தையை கண்டதும் கடல் அரசன் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாமல் இருந்தது. என்னால் நீ வளர்க்கப்படுவதால் இன்று முதல் அனைவராலும் ஜலந்தரன் என்று அழைக்கப்படுவாய் என்று கடல் அரசன் கூறினார். சிறிது நேரத்தில் குழந்தையானது அழத்துவங்கியது. கடல் அரசனால் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தார். அவ்வேளையில் பிரம்மதேவர் அவ்விடத்தில் தோன்றினார்.

    சிவபுராணம் நாளையும் தொடரும்....

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக