வாழ்வாதாரத்திற்கு முக்கியமானவர் சூரியன். விவசாயிகளின் கண்கண்ட தெய்வமாக திகழும் சூரிய பகவான், 'ஆத்மாவுக்கு காரகத்துவம் வகிக்கிறார்" என்கிறது ஜோதிடம்.
ஜாதகத்தில் சூரியன் நன்றாக அமையப்பெறாதவர்கள், சூரியனை வணங்கி ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். ஸ்ரீராமர் அப்படி வழிபட்டுதான் ராவணனை வெல்லும் ஆற்றலை பெற்றார்.
சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷமானது. சூரிய வழிபாடு நம் ஆன்மிகத்தின் சிறப்பம்சம். சூரிய வழிபாடு செய்வதால் ஆன்ம பலமும், உடல் வலிமையும் நமக்கு கிடைக்கும்.
ஜாதகரின் கம்பீரமான தோற்றத்திற்கும், உடலில் உள்ள எலும்புகளுக்கும், தலைப்பகுதிக்கும் சூரியனே காரகம் பெறுகிறார்.
11-வது வீட்டை இலாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய இலாபங்களையும், சுகங்களையும் அளிக்கக்கூடியது இந்த வீடுதான்.
லக்னத்திற்கு 11ம் இடத்தில் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் தெய்வத்தால் காக்கப்படுவார்கள்.
11ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?
👉 கீர்த்தி உடையவர்கள்.
👉 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.
👉 நிர்வாகத் திறமை உடையவர்கள்.
👉 நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
👉 நன்றி உணர்வு உடையவர்கள்.
👉 மற்றவர்களின் மூலம் ஆதாயம் அடைவார்கள்.
👉 கல்வி கற்பதில் ஆர்வம் உடையவர்கள்.
👉 சில நேரங்களில் எவருக்கும் கட்டுப்படாமல் தன் விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.
👉 விடாமுயற்சி உடையவர்கள்.
👉 எதிர்ப்புகள் இருந்தாலும் வெற்றி வாகை சூடக்கூடியவர்கள்.
👉 மற்றவர்களிடம் வேலைவாங்கும் திறமை உடையவர்கள்.
👉 பொருள் ஈட்டும் திறமை உடையவர்கள்.
👉 எதையும் பலமுறை சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியவர்கள்.
👉 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக