>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 16 ஏப்ரல், 2020

    இன்று முதலே ஆரம்பியுங்கள் !

    👉இந்த லாக்டவுன் நாட்களில் தினந்தோறும் நாம் செய்து அதை நம் பழக்கமாக மாற்றக்கூடிய முதல் விஷயம் எதுவென்றால் அது உடற்பயிற்சி தான். எனக்கு உடற்பயிற்சி செய்வதற்கு நேரமே இல்லை என்று சொல்பவர்கள், தற்போதைய காலக்கட்டத்தை பயன்படுத்தி அதை பழக்கமாக மாற்றுங்கள்.

    👉ஏனென்றால் உடற்பயிற்சி என்பது உடல் நிலையையும், நலத்தையும் மேம்படுத்துவதாகும். அதுமட்டுமின்றி ஒரு நபரின் உடல்நலத்தை பாதுகாத்து உடல்நிலையை சீராக வைக்க உதவும்.

    👉நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், உடலுழைப்பு என இவை அனைத்தும் உடற்பயிற்சிகளே.

    👉ஆனால், தற்போது உள்ள நிலையில் இவைகளை நம்மால் நிச்சயம் செயல்படுத்த இயலாது. ஆகையால், உங்கள் வீட்டிலிருந்து தினந்தோறும் நீங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும்.

    என்ன பயிற்சி செய்யலாம்?

    ✅முதலில் எளிமையான உடற்பயிற்சி செய்தாலே போதும். ஒரே நாளில் உடற்பயிற்சி செய்து நம்முடைய ஆரோக்கியத்தை அதிகப்படுத்திவிட முடியாது. எனவே, காலையில் எழுந்ததும் உங்கள் மனதிற்கு பிடித்த பாடலை போட்டுக்கொண்டு வீட்டிற்குள்ளேயே நடனமாடுங்கள்.

    ✅ஏனெனில் நடனம் மிகச்சிறந்த உடற்பயிற்சியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் வடிவமைப்பை கட்டுக்குள் வைக்கும்.

    ✅பின்னர் உங்களின் கை, கால்களுக்கு தேவையான உடற்பயிற்சியை செய்ய தொடங்கினாலே போதும், உங்கள் உடல் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

    எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

    ⏰இதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராக இருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும். இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால், உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து கொள்ளலாம்.

    ⏰அவ்வாறு நாம் தொடர்ச்சியாக செய்யும்போது நம்முடைய உடல் ஆரோக்கியமானதாக மாற இவை வழிவகுக்கின்றன. மேலும், இவை நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது.

    👉உடற்பயிற்சி செய்வதற்கு விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை.

    👉எனவே, நாட்களை வீணடிக்காமல் இன்று முதலே தொடங்கி உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக