எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 220 4ஜி பீச்சர் போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய நோக்கியா 220 4ஜி போனின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.3,201-ஆக உள்ளது.
இந்திய விற்பனை
குறிப்பாக இந்த புதிய பீச்சர் போன் மாடல் வரும் மே மாதம் 7-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது, மேலும் இந்த சாதனத்தின் இந்திய விற்பனை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு மற்றும் நீல நிறத்தில் வாங்க கிடைக்கும்
இந்த நோக்கியா 220 4ஜி பீச்சர் போன் மாடல் 4ஜி நெட்வொர்க் மற்றும் VoLTE ஹை-டெபினிஷன் அழைப்புகளுக்கான ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த சாதனம் கிளாசிக் பாலிகார்பனேட் பாடியை கொண்டுள்ளது மற்றும் இது கருப்பு மற்றும் நீல நிறத்தில் வாங்க கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 220 4ஜி பீச்சர் போன்
2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
மேலும் இந்த சாதனம் 0.3எம்பி மெகாபிக்சல் விஜிஏ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவும் இவற்றுள் அடக்கம்.
3ஜி நெட்வொர்க்கிற்கு
இந்த புதிய நோக்கியா சாதனத்தில் பீச்சர் ஓஎஸ், ப்ளூடூத் 4.2 இணைப்பு, 16எம்பி ரேம் மற்றும் 24எம்பி மெமரி உள்ளிட்ட ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த போன் 3ஜி நெட்வொர்க்கிற்கு ஆதரவை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்எம்டி குளோபல்
நோக்கியா 220 4ஜி பீச்சர் சாதனத்தில் 1200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே 6 மணி நேரத்திற்கும் மேலான பேச்சு நேரத்தையும் 27 நாட்கள் காத்திருப்பு நேரத்தையும் வழங்க முடியும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும்
நோக்கியா 220 4ஜி பீச்சர் மாடலில் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் இண்டர்நெட் ப்ரவுஸர் உள்ளிட்ட ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இது எம்பி 3 பிளேயர், ஹேண்ட்ஸ் ஃப்ரீ எஃப்எம் ரேடியோ மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.
இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுக்கும் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக