Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

இரவோடு இரவாக 3 ஹானர் போன்கள் அறிமுகம்; அதுவும் பட்ஜெட் விலையில்!

ஹானர் நிறுவனம் சத்தமின்றி ஹானர் 9A, ஹானர் 9C மற்றும் ஹானர் 9S எனும் மூன்று ஸ்மார்ட்போன்களை ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தொடரானது லோ-எண்ட் முதல் மிட்-ரேன்ஜ் வரை நீள்கிறது.

க்ரின் 710 சிப்செட், பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு, 48 எம்பி ட்ரிபிள் கேமராக்கள் மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஹானர் 9சி ஸ்மார்ட்போன் தான் இந்த மூன்றில் மிகவும் விலை உயர்ந்தது.

ஹானர் 9 எஸ் ஒரு மலிவு விலையிலான மாடல் ஆகும். அது ஒற்றை 8 எம்பி கேமரா, மேஜிக் யுஐ 3.1 ஸ்கின் கொண்ட ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மற்றும் ஒப்பீட்டளவில் சிறிய 5.45 இன்ச் டிஸ்பிளே ஆகியவைகளை கொண்டுள்ளது.

கடைசியாக, ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மீடியா டெக் எம்டி 6762 ஆர் எஸ்ஓசி, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் செல்பீ கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

ஹானர் 9ஏ, ஹானர் 9சி மற்றும் ஹானர் 9எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் இலவசங்கள்:

ஹானர் 9ஏ - தோராயமாக ரூ.11,300; இதனுடன் மதிப்புள்ள ஹானர் பேண்ட் 4 ஃபிட்னஸ் டிராக்கர் இலவசம்.
ஹானர் 9சி - தோராயமாக ரூ.13,400 - இதனுடன் ஹானர் பேண்ட் 5 ஃபிட்னஸ் டிராக்கர் இலவசம்.
ஹானர் 9எஸ் - தோராயமாக ரூ.7,200) - இதனுடன் ஹானர்பேண்ட் 4 இலவசம்.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- 6.3 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே
- வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு
- மீடியா டெக் எம்டி 6762 ஆர் எஸ்ஓசி
-3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மெமரி விரிவாக்கம்
- ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான மேஜிக் யுஐ 3.1.1 கஸ்டம் ஸ்கின்
- 13எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் கேமரா
- 8 எம்பி செல்பீ கேமரா
- பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 9சி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- 6.39 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி+ டிஸ்ப்ளே
- இடது மூலையில் பஞ்ச்-ஹோல் கட்அவுட்
- 90 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்
- க்ரின் 710 எஸ்ஓசி
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ஆண்ட்ராய்டு 10அடிப்படையிலான மேஜிக் யுஐ 3.1.1
- கூகுள் பிளே ஸ்டோருக்கு பதிலாக ஹூவாய் சொந்த ஆப் கேலரி
- 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ட்ரிபிள்கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்பீ கேமரா
- 4,000 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 9எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- 5.45-இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- மீடியாடெக் எம்டி 6762 எஸ்ஓசி
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான மேஜிக்யூஐ 3.1 ஸ்கின்
- 8MP ரியர் கேமரா
- 5MP செல்பீ கேமரா
- பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இல்லாத 3020 எம்ஏஎச் பேட்டரி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக