வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் வெவ்வேறு நாட்டின் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் தொழில் வளமின்றி முடங்கி போய் உள்ளன. இதனால், பல்வேறு நாடுகள், வெளிநாடுகளில் தாங்கள் தொடரவிருந்த தொழில்களை விலக்கிக்கொண்டு அந்நாட்டிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.
அப்படி வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு சிறப்பு குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார். இந்த அமைப்பானது வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கொரோனா பாதிப்பு காரணமாக, வெவ்வேறு நாடுகளில் தொழில் தொடங்குவதாக இருந்த ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்க முனைந்துள்ளன. இதனை தமிழக அரசு பயன்படுத்தி கொண்டு அந்த நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக