பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.அவரது வழக்கில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கூட நிதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை அமைக்க நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எனவே இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற்றது.இதில் வழக்கில் எந்த ஆதரங்களும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். பின்னர் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 25 000 அபராதம் விதித்து , அந்ததொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக