தமிழகத்தில் நேற்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571-இல் இருந்து 621 ஆக உயர்ந்துள்ளது எனவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
இதையெடுத்து சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் அதிகபட்சமாக 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது எனவும் சென்னை மாநகர் முழுவதும் 40 இடங்களில் நோய்த்தொற்று தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அளித்துள்ளார்.
மேலும் மார்ச் 10-17 தேதி வரை சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை பீனிக்ஸ் மால் ஊழியர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக